நான்தான் எனக்குப் பொறுப்பு

Sherif sir:
🌸 மக்கள்,
அவரவர் பொறுப்பிலிருந்து
தப்பித்துக் கொள்ள...

ஆயிரக்கணக்கான வழிகள் வைத்திருக்கிறார்கள்...

காரணங்கள், காரணங்கள்,
மேலும் காரணங்கள்...

🌸 "நான்தான் எனக்குப் பொறுப்பு" என்ற
ஒரே உட்கருத்தைத் தவிர்க்க,

இவ்வளவு காரணங்கள்...

🌸 "நான்தான்,
என் வாழ்க்கைக்குப் பொறுப்பு --

என்னுடைய
எல்லா கஷ்டங்களுக்கும்...

நிகழ்ந்து கொண்டிருக்கிறதே
அவை அனைத்திற்க்கும்...

நானே பொறுப்பு."

🌸 இவையெல்லாம்...
நான் விதைத்த விதைகளே,

இப்போது,
நான் அவற்றை அறுவடை செய்கிறேன்;

இந்த எண்ணம்...

ஒரே ஒருமுறை,
உங்களது இயல்பான புரிதலாகிவிட்டால்...

🌸 பிறகு எல்லாம் எளிதாகிவிடும்...

பிறகு உங்கள் வாழ்க்கை,
ஒரு புதிய திருப்பத்திற்குள் நுழையும்...

'புதிய பரிமாணத்திற்குள்,
நகரத் தொடங்கும்!"

🌿ஓஷோ🌿

Post a Comment

0 Comments