பிறவிக்குக் காரணம்

பிறவிக்குக் காரணம்
பாவ புண்ணியங்கள். இக்
கர்மங்களை மூன்றாகப் பிரிப்பர்.
அவை முன்வினை,நுகர்வு வினை,ஏறு வினை என்றாகும்.


இவற்றை சஞ்சிதம், பிராரப்தம்,ஆகாமியம்
என்பர்.

இவற்றைக் குறித்து ஏற்கனவே ஒரு பதிவில்
விளக்கி இருக்கிறேன்

வங்கியில் பட்ட கடன் அல்லது இருப்பு சஞ்சிதம்.
கடனாகவோ அல்லது இருப்பிலிருந்தோ அன்றாட
செலவிற்காக எடுத்துள்ள
பணம் பிராரப்தம்.

முயற்சியால் பணத்தைச் சம்பாதிப்பது ஆகாமிக் கர்மமாகும்.

சம்பாதித்த பணத்தை வங்கியில், நமது கணக்கில்
போடுவதென்பது சஞ்சிதமாகிய முன் இருப்பில் சேரும்.

வங்கிக் கடனோடோ அல்லது இருப்போடோ இறந்துவிட்டால் அதனை அனுபவிக்க மீண்டும் பிறப்பு வரும்.

இதிலிருந்து நாம் அறிய
வேண்டியது:-

எடுத்துள்ள இப்பிறவியில்
பாபம் செய்யாமல்,புண்ணியஞ் செய்தாலும், அதனை நற்காரியங்களின் பொருட்டு இறைவன் பேரால் இல்லாதாக்க வேண்டும்.

எடுத்துள்ள பிறவியில் தத்துவ ஞானம் பெறவேண்டும். இறைவனை உணர வேண்டும். எடுத்துள்ள பிறவியில் இன்ப துன்பங்களை சமமாகப் பாவித்து அனுபவித்து
விடவேண்டும்.

உறவுகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளைப்
பற்றின்றி செய்ய வேண்டும்.

இதனைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் பிறவிகள் தொடரும்.

தன்னை யறிந்திடுந்
  தத்துவ ஞானிகள்
முன்னை வினையின்
  முடிச்சை யவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப்
  பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த
  சிவனரு ளாலே.
(திருமந்திரம்).

🌱 

Post a Comment

0 Comments