ஞானம் தேடும் இளைஞன்

*ஞானம் தேடும் இளைஞன் !!!*


சூஃபி யைப் பார்க்க ஓர் இளைஞன் வந்திருந்தான்.  வந்தவன் சூஃபியிடம்
யா ஷெய்கு,  மஃரிபத்தை தேடி அலையும் என்னைப் போன்றவர்களுக்கு ஏன் இறைவன் வழிகாட்டுவதில்லை எனக் கேட்டான்.

சூஃபி அமைதியாக அவனை சில நொடிகள் பார்த்துவிட்டு ,
நானுனக்கு சரியான விளக்கமளிக்கிறேன். ஆனால் அதற்கு முன் நான் கேட்பதற்கு உண்மையான பதிலை சொல்லவேண்டும் என்றார். ஆகட்டும் என்றான் இளைஞன்.

உன்னிடமுள்ளவற்றில் நீ எதை அதிகம் நேசிக்கிறாய் ?
"என் கைக் கடிகாரத்தை".

உனக்கு திருமணமாகிவிட்டதா ?
"இல்லை".

காதலி இருக்கிறாளா ?
"ஆம்".

உன் தந்தையும் உன் காதலியும் ஒரே நேரத்தில் உன்னை அழைத்தால் நீ யாரை சந்திக்கச் செல்வாய் ?
"என் காதலியை".

ஏன்  ?
"நான் போகவில்லை யென்றால் அவள் என்னை வெறுக்கக் கூடும்"

இப்பொழுது உன் காதலி எங்கே ?
"அவள் பெற்றோருடன் உறவினர் திருமணத்திற்காக வெளியூர் சென்றிருக்கிறாள்".

உன் காதலி வெளியூர் போகாமல் இருந்திருந்தால் நீ இங்கு வந்திருக்க மாட்டாயல்லவா ?
"ஆமாம்".

உன்னைப்போலவேதான் பலரும் தங்களுக்கு வேலையே இல்லாத சமயங்களில் மலிவான முறையில் ஞானத்தைப் பற்றி நினைக்கிறார்கள். அதனால்தான் இறைவன் வழிகாட்டுவதில்லை என்றார்.

ஷெய்கிடம், நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே என்றான் அந்த இளைஞன்.

(ஆனால் சுவாசிப்வர்களுக்கு
இதன் உண்மை புரியும் என்கிறேன் நான்! சரிதானே👍)

Post a Comment

0 Comments