சுவாசத்தை கவனித்தல் தியானம்_ஓஷோ

சுவாசத்தை கவனித்தல் தியானம் 

எளிமையானதாகவும், எல்லோருக்கும் பயன் தரக் கூடியதாகவும், அனைவருக்கும் உகந்த ஒரு தியான முறையை இன்று பார்க்கலாம்.


#தியானம்_செய்யும்_இடம்

எப்போது –
நீங்கள் அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய எல்லா நேரங்களிலும், வீட்டிலோ , ஹாலிலோ , ரயிலிலோ, பஸ்ஸிலோ, பயணம் செல்லும் சமயத்திலோ, எங்கு நீங்கள் இருந்தாலும் இந்த தியானம் செய்யலாம்.



#காலம்

2 நிமிடங்கள் முதல் 30 நிமிடம் வரை .


#தியான_செயல்முறை

உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி. உள்ளே செல்லும்போது நீயும் உள் மூச்சுடன் உள்ளே செல், மூச்சு வெளியே வரும்போது நீயும் வெளி மூச்சுடன் வெளியே வா.
நீ சுவாசத்துடன் உள்ளே சென்று , பின் அதனுடன் வெளியே வருவது என்பது போன்று செய்யும் சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய்.
நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும்.
இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும். திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும்.

நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக,
பெரியதாக மாறும்.
ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும்,
பின் வெளி வரும்.
வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும். இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.
அந்த இடைவெளி தியானம் தரும் அத்தனை ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் .
இந்த தியானத்தை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது.

நீ இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.
ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம்.
சில சமயங்களில் வெறும் இரண்டு நிமிடங்கள் கூட செய்யலாம்.
சில நேரங்களில் படுக்கையில் படுத்திருப்பாய். ஆனால் தூக்கம் வராது.
தூக்கத்தைப்பற்றி கவலைப்படாதே. இந்த தியானத்தைச் செய். இது இரண்டு வேலைகளையும் செய்யும்.
இது ஆழ்ந்த அமைதியான நிலையைத் தரும்,
இதைச் செய்வதன் மூலம் தூக்கமும் வந்து விடும்.
ஆனால் நீ எழுந்திருக்கும் போதுதான் தூங்கி விட்டிருப்பதே உனக்குத் தெரியும்.
ஆனால் மிகவும் வேறுபட்ட விஷயம் என்னவென்றால் நீ தியானம் செய்தவாறே தூங்கி விட்டிருந்ததால்
நீ காலையில் எழும்போதும் தியான தன்மையோடு எழுவாய்.
அப்படி என்றால் ஆழ் மனதில் எங்கோ ஆழத்தில் நீ அறியாவண்ணம் இந்த தியான முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம்.
உனது இரவு முழுவதும் தியானமாக மாறி விட்டிருக்கிறது,
இது உனக்கு கிடைக்கக் கூடிய மிக அதிக அளவு நேரமாகும். உனது தூக்கம் மிகவும் அமைதியானதாகவும், ஓய்வானதாகவும் புத்துணர்வு தரக்கூடியதாகவும் மிகவும் வேறுபட்ட குணத்தில் இருக்கும்.
ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை இந்த தியான நிலை தொடர்கிறது.
நீ இந்த தியானத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.
ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம்.
தெய்வீகத்தின் பரவச கணங்களை இந்த தியானம் உனக்கு நிச்சயம் அளிக்கும்.
-- ஓஷோ விழிப்புணர்வு குழு


மனதிற்கு எப்படி ஓய்வு கொடுப்பது

எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது தனி அறையில் உட்கார்ந்து கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
2 நிமிடம் மூச்சைக் கவனியுங்கள்.
பிறகு
மனதில் வரும் எண்ணங்களை கவனியுங்கள் . வானத்தில் செல்லும் மேகங்களை கவனிப்பது போல.
மனம் என்னவெல்லாம் செய்கிறதோ அதையெல்லாம் கவனியுங்கள் .
1. மனதைத் தொந்தரவு செய்யாதீர்கள்
2. மனதைத் தடுக்காதீர்கள் ,
3. மனதைத் அடக்காதீர்கள் .
உங்கள் பங்காக எதையுமே செய்யாதீர்கள் கவனித்தலைத் தவிர.
நீங்கள் கவனிப்பாளன் மட்டுமே ..
அப்படிக் கவனிக்கும் அற்புதமே தியானம் .
தியானம் தொடங்குவதே மனதை சாட்சியாக இருந்து பார்ப்பதில் தான் .
அது ஒன்று தான் உங்களை மனதிடம் இருந்து தனியாகப் பிரித்து உங்களை உங்கள் ஆன்ம நிலைக்கு அழைத்துச் செல்லும் ஒரே வழியாகும் .
இப்படி இந்த நிலையில் இருக்கும் போது தியானத்தின் பேரயதிசயத்தை உணர்வீர்கள்.
ஒரு 30 நிமிடம் இந்த தியானம் செய்து விட்டு , மீண்டும் உங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபடுங்கள்.
இந்த 30 நிமிட தியானம் மனதிற்கு முழு ஓய்வையும் , மகிழ்ச்சியையும் , புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
--ஜோர் புத்தன்

Post a Comment

0 Comments