🍁தியானம் என்பது லாவகம் !(KNACK)🍁
'லாவகம்' என்பது என்ன?
🌸 பயிற்சிகள், தவறுகள், விழுதல்,
எழுதல், வழி தவறுதல்,
பிறகு மீண்டு வருதல்...
இப்படி பல்லாயிரம் முயற்சிகளினால்...
"திடீரென்று ஒரு நாள்,
உனக்கு அந்த 'லாவகம்' கைகூடும் !"
🌸 'லாவகம்' என்பது தவறுகள், பிழைகள் செய்வதால் கிடைக்கும் சாரம்.
இது நீ ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று அல்ல.
"லாவகத்தை உன்னால் மறக்க முடியாது !"
மறந்தால் அது 'லாவகம்' அல்ல.
🌸 அது உன்னுடைய இரத்தம்,
எலும்பு, மஜ்ஜை, உன் உள்ளிருப்பு
இவை அனைத்துக்குள்ளும் சென்றுவிடும்...!
பிறகு உன்னால் மறக்கவே முடியாது !!
🌿ஓஷோ🌿
0 Comments