🚪💖🔑♡🧘🏻♂️🙏🏻🧘🏻♀️♡🗝️💖🚪
"எல்லோரும் இங்கே வருவதற்கு ஏன் அனுமதியில்லை?"
எவருடைய மனங்கள் தேடுவதற்குத் தெளிவாக ஆரம்பம் செய்துவிட்டிருக்கின்றனவோ அவர்கள் மட்டுமே நுழைய முடியும்.
எல்லோரும் இங்கே எதற்காக வரவேண்டும்?
இது ஒன்றும் ஒரு பொழுது போக்கு அரங்கம் அன்று!
வெறுமனே வெற்று ஆர்வம் காரணமாக யாரும் இங்கு வரக்கூடாது.
இங்கே நிகழும் இந்த விஷயம் ஒரு சொற்பொழிவு அன்று.
இங்கே இதயம் திறந்து வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.அதற்குத் தயாராக இருப்பவர்கள்,தங்களுடைய இதயத்தத் திறந்து வைத்துக் கொள்ள ஆர்வமாய் இருப்பவர்கள் மட்டுமே வரமுடியும்.
இங்கே வருவதற்கான ஒரே நோக்கம் நம்முடைய இதயங்கள் சந்திக்க முடியுமா என்பதைப் பார்ப்பதற்காக மட்டுமே,இல்லையெனில் உங்களுடைய நேரமும் பாழாகி விடும்.என்னுடைய முயற்சியும் வீணாகிவிடும்.
இல்லையெனில் நீங்கள் கோபத்துடன் வெளியேறுவீர்கள்.
நீங்கள் கூறுவீர்கள் : "இது என்ன வகையான சொற்பொழிவு? அவர் சில விஷயங்களை விளக்கிக் கூறியிருக்க வேண்டும்.பயன் அளிக்கின்ற சில விஷயங்களை அவர் விளக்கியிருக்க வேண்டும்."
தெய்வத்தன்மையை நினைவு கூர்வதற்கு விருப்பமில்லாதவர்கள்,
தெய்வத் தன்மையை இன்னும் நினைவு கூறாதவர்கள்,
தெய்வத்தன்மை பற்றி ஒருபோதும் நினைத்துப் பார்க்காதவர்கள்,
தெய்வத்தன்மை என்னும் ஒரு விஷயம் இருக்கிறது என்பதையும் தெய்வத்தன்மையை ஒருவர் தேட வேண்டும் என்பதையும் கூடப் புரிந்து கொள்ளாதவர்கள்,
ஆகியோரிடமும் இன்னும் உலகத்தின் போதையிலேயே மூழ்கிக் கிடப்பவர்களிடமும் தெய்வத்தன்மையைப் பற்றி பேசாதீர்கள்.
அவர்கள் உறக்கத்தில் இருக்கிறார்கள்.
அவர்களுடைய கனவுகளுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள்.
இல்லையென்றால் அவர்கள் கோபம் கொள்வார்கள்.
--ஓஷோ--
0 Comments