ஒரு தியானப் பயிற்சி... ●

 ● ஒரு தியானப் பயிற்சி... ●


தியானம் என்றால் என்ன?


🌸ஹ்சு யுன் சொல்கிறார்...


"கீழே வைப்பதில் இருக்கிறது தியானம்"


எதைக் கீழே கிடத்துவது?


🌸உன்னை வை.


அதற்குக் குறைவாக,

எதை வைத்தும் பயனில்லை!


'நீ எப்போதாவது, இறந்தவர் அருகே இருந்திருக்கிறாயா?


🌸அப்போது, 

அவரைத் திட்டினால்...

அவருக்கு கோபமே வராது.


அடித்தாலும்,

அவர் திருப்பி அடிக்கமாட்டார்.


🌸உயிரோடு இருக்கும்போது,

அவர், எல்லோரையும் போலத்தான் 

நடந்து கொண்டிருப்பார்....


🌸அவர்...

புகழுக்கும், பணத்திற்கும், 

ஆசைப்பட்டவராகவே இருந்திருப்பார்...


ஆனால், 

இப்போது எதுவுமற்றுக் கிடக்கிறார்...


🌸அவருக்கு எந்தவித விருப்பு வெறுப்புமில்லை...


"எல்லாவற்றையும் அவர் 

கீழே போட்டுவிட்டார்..."


🌸நீயும், உயிரோடு இருக்கும்போதே...


அந்தக் கிடத்தும் நிலைக்கு வந்துவிட்டால்...


🌸"நீ தியானத்தில் இருக்கிறாய்" 

என்று பொருள்.


☘மூன்றாவது கோப்பைத் தேநீர்.

🌿ஓஷோ🌿

Post a Comment

0 Comments