பூமியும் வானமும்

 உலகில் உள்ள மணல்துகள்களின் எண்ணிக்கையை விட அதிக அளவிலான நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் உண்டு. அவற்றில் எதிலாவது ஏலியன் உயிர் இல்லாமல் இருக்குமா என்ன?



ஒரு விஞ்ஞானி இது குறித்து பேசுகையில் "பூமியை தவிர எங்கும் உயிர்கள் இல்லையெனில் கடவுள் நிறைய ரியல் எஸ்டேட்டை வீணடித்துவிட்டார்" என்றார்


ஆனால் உண்மை விசித்திரமானது


நிலவு இல்லையெனில் பூமியில் உயிர்கள் இருக்காது என்கிறார்கள் விஞ்ஞானிகள். பூமியை நிலவு நேராக நிறுத்தி வைத்துள்ளது. நிலவு இல்லையெனில் பூமியில் பருவகாலங்கள் இருக்காது. திடீர் என சகாராவில் மழைபெய்யும். அமெசான் காடுகளில் மழைபெய்யாது. அண்டார்டிகா வெப்பபகுதியாகும். சகாரா குளிர்பகுதியாகும்.


சரி..வீனஸ், மெர்க்குரி ஆகியவை இல்லையெனில் பூமி கண்டபடி சுற்றி சூரியனை நெருங்கி அதில் உள்ள உயிர்கள் எரிந்து சாம்பலாகிவிடும். மேலும் செவ்வாய், ஜூபிடர், சனி ஆகியவை இல்லையெனில் பூமி சூரியனை விட்டு தொலைதூரம் சென்று குளிர்பகுதியாகிவிடும்.


ஆக உலகில் உயிர்கள் தழைத்திருக்க மற்ற கிரகங்கள் அவை தற்போது இருக்கும் பகுதியில் இருப்பது அவசியம்.


ஜூபிடரும், சேடர்ன் கிரகமும் பூமியை தாக்க வரும் அஸ்ட்ராய்டுகளை தம்மிடம் இழுத்துக்கொள்வதால் தான் பூமி தப்பிபிழைத்து இருக்கிறதாம். அஸ்ட்ராய்டுகள் இல்லையெனில் பூமியில் நீரும், உயிரும் தோன்றியிருக்காதாம்.


ஆக சூரிய குடும்பமும், நிலவும் இப்போது இருக்கும் வடிவில் இருந்து கொஞ்சம் வேறுபட்டு இருந்திருந்தாலும், கொஞ்சம் இடம் மாறி இருந்தாலும் பூமியில் உயிர்கள் இல்லை.


சூரிய குடும்பம் மட்டுமல்ல, பால்வெளி காலக்ஸியின் கடைசி ஓரத்தில் சூரியன் இருக்கிறதாம். அது மட்டும் கடைசியில் இல்லாமல் காலக்ஸியின் நடுவே இருந்திருந்தால் அதன் அருகே பல நட்சத்திரங்கள் நெருக்கமாக இருந்திருக்குமாம். அதன் ரேடியேசன் கதிர்வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் பூமி அழிந்திருக்குமாம்


ஆக பூமி எனும் ஒற்றை கிரகத்தில் உயிர்கள் தப்பிபிழைத்து இருக்க, ஒரு பால்வெளியும், அதன் நடுவே கருந்துளையும், சூரியனும், பிற கோள்களும், அவற்றின் நிலவுகளும் தேவைப்படுகிறது


திச் நாட் ஹான் சொன்னதுபோல் "உன் தோட்டத்தில் இருக்கும் ரோஜா மலரே ஒரு அதிசயம் தான். அந்த ஒற்றை ரோஜாவை மலர வைக்க ஒரு பிரபஞ்சமே தேவைப்படுகிறது"


#பூமியும்_வானமும்


~ நியாண்டர் செல்வன்

Post a Comment

0 Comments