எங்க நாம் அனைவரும்

 அர்ஜுனரும் துரியோதனரும் எதிர் எதிர் படையாக நின்றிருந்தனர்.இருவருமே கிருஷ்ணருக்கு வேண்டியவர்கள்.


ஆகையால் கிருஷ்ணர் சொன்னார் உங்கள் இருவருக்குமே நான் உதவ வேண்டும் ஒருவர் என்னை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.மற்றொருவர் என்னுடைய படையை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.


துரியோதனன் வரலாற்று பிழை செய்தான்.அவன் நினைத்தான் ஒரு கிருஷ்ணரால் என்ன செய்ய முடியும் என்று அவருடைய படைகளை எடுத்துக்கொண்டான்.


ஆனால் அர்ஜுனர் இப்படி நினைத்தார் ஆயிரம் நினைவிழந்தவர்களை விட ஒரு விழிப்புணர்வு உள்ளவர் அருகில் இருந்தால் போதும் அதுவே பல படைகளுக்கு சமம்.


தொடர்ந்து போர் நிகழ்ந்துகொண்டிருக்கும் போது ஒரு நிலையில் அர்ஜுனர் மிகவும் சோர்வடைந்தார்.


கீதையில் சொல்லப்பட்டுள்ளது.போர் களத்தைப்பார்த்து அர்ஜுனர் மிகவும் குழப்பமடைந்து கிருஷ்ணரிடம் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் இது....என்னுடைய சக்தி நீக்கப்பட்டுவிட்டது.நான் என்னை செயல்பட முடியாதவன் போலும் பதட்டமாகவும் உணர்கிறேன் என்றார்.


அர்ஜுனர் மிகத்திறமையானவர்.மிகச்சிறந்த வில்லாளர்.அவர் சொல்கிறார் காண்டிவத்தை என்னால் தூக்க முடியவில்லை.


நான் சன்யாசி ஆகிவிட விறும்புகிறேன்.இந்த போர் வேண்டாம்.


கிருஷ்ணர் அர்ஜுனரிடம் சொன்னார் நீங்கள் பிளவுபட்டுவிட்டீர்கள்.


போரை நீங்கள் நிகழ்த்துவுதாக எண்ணிக்கொள்கிறீர்கள்.அது தவறு.


கொல்லப்படுபவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டவர்கள்.அவர்களுக்கு விதிக்கப்பட்டுவிட்டது.கொல்வது நீங்களல்ல.நீங்கள் ஒரு கருவி.


செயல் நடக்கும்போதே முடிவை பற்றி யோசிக்கிறீர்கள்.முடிவு பற்றி யோசிக்கும்போது நீங்கள் பிரிக்கப்படுகிறீர்கள்.


எனவே முடிவை விட்டுவிடுங்கள்.செயலை மட்டும் செய்யுங்கள்.முடிவை பற்றி கவலைப்படாதீர்கள்.இங்கே இப்பொழுது என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள்.அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்காதீர்கள்.அது உங்கள் கையில் இல்லை 


இவ்வாறு கிருஷ்ணர் கூறிய சிறிது நேரத்தில் காண்டிவம் தூக்கப்பட்டுவிட்டது.


_____________________________________________

திறமை அதேதான்.சக்தியும் அதேதான்.அது எங்கும் போய்விடவில்லை.அது உங்களுக்குள்ளேதான் இருக்கிறது.


எப்பொழுதெல்லாம் மனம் பிளவு படுகிறதோ அப்பொழுதெல்லாம் நீங்கள் சக்தியற்றவராகிறீர்கள்.


__ஓஷோ.



Post a Comment

0 Comments