தியானத்தின் சூட்சுமம்

தியானத்தின்
சூட்சுமம்,,,,


பூட்ட(பட்ட)படாத கதவுகள்,,,


கதவுகள் திறந்தே இருக்கின்றன.மனிதன் நுழைய விரும்புவதில்லை.

ஏனெனில் இதற்கு முன் நுழைந்தவர்கள் எப்படி வெளி வருகிறான் என்று கதவுக்கு வெளியில் காத்திருக்கிறான்.

உள்ளே சென்று முழூதும் பார்தவன் வெளி வரும்போது மானிடக்கண்ணுடைய வெளி மனிதனுக்கு தெரிவதில்லை.

வெளியில் வந்தவனும் அதன் சூட்சுமம் புரிந்ததால்வெளியில்சொல்வதில்லை.

அரைகுறையாக பாதியில் திரும்பியவன் வெளியே வரும் போது அவனை பார்த்து வெளியில் உள்ளவன் கேட்கும் போது வந்தவனெல்லாம் சொல்லும் பதில்கள் கேட்டவனுக்கு புதிராக குழப்பமாக உள்ளதால் சிலர் போறவனையும் தடுத்து கொண்டிருக்கிறார்கள்.

ஆதாலால் நுழைவது என்று முடிவு செய்து விட்டால் இதுவரை அறிந்த அனைத்து தகவல்களையும் மறந்து,

உன் சுயத்தில் செல்ல நினைக்கும் போதே மற்றவர்களுக்கு பூட்டபட்டது போல் தெரியும் கதவு உனக்கு திறந்திருப்பது தெரியும்.

அதையும் தாண்டி உள்ளே சென்றாயானல் அனைத்தும் புரியும்.

மனதை கவர்ந்தது,,

Post a Comment

0 Comments