நீங்கள் எப்போதும் புயலை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

மிர்தாத் பேசுகிறார்

:rose::rose::rose::rose::rose::rose::rose::rose::rose:

நீங்கள் எப்போதும் புயலை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

அப்போதுதான்,
புயலால் அழைக்கழிக்கப் பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியும்.

*பலவீனமானவர்கள்,
பலவீனமான வர்களுக்கு ஒரு பாரம் ஆனால்,வலிமை கொண்டவர்களுக்கு,
அவர்கள் மகிழ்ச்சியான பொறுப்பு.

*கவனமாக இருங்கள் விலை மதிப்பில்லாத உமது வாழ்வை மலிவான தங்கத்திற்குச் சமமாக நினைத்து விடாதீர்கள்.

*உங்களுக்குள் எல்லை வகுத்துக் கொள்ளாதீர்கள்.

பரவுங்கள் நீங்கள் இல்லாத இடமே இல்லை என்னும் படிக்கு எங்கும் பரவி இருங்கள்.

*கடவுளும்,மனிதனும் என இருமைப் படுத்தாதீர்கள்.
இருப்பதெல்லாம்
கடவுள் மனிதன்,
அல்லது
மனிதக் கடவுள்
என்ற ஏகம்தான்.

*உங்கள் கண்ணிழந்த கஞ்சத்தனமான இதயத்தைக் குற்றம் சாட்டுங்கள்.
அது
தனது வாழ்வின் சாற்றைச் சிலருக்கு வழங்கி பலருக்கு மறுத்துவிடுகிறது.

*எல்லாப் பருவங்களும் அன்பின் பருவகாலங்களே.

எல்லா இடங்களும் அன்பு வாழத் தகுந்த இடங்களே.

*நீங்களே விதைப்பவர்கள்,
அறுவடையாளர்கள்,
வெட்டுபவர்கள்,
நீங்களே
விளை நிலமும்,
அறுவடைக் களமும்.
அறுவடை குறைவாக இருந்தால்,
விதைத்த விதையைப் பாருங்கள்.

*மனிதனின் இதயத்திற்குள் செல்லாமல்,
இறைவனின் இதயத்திற்குள் எவ்வாறு செல்வீர்கள்??

*நீங்கள் மக்களை ஆள நினைப்பவரா??முதலில் உம்மை ஆளக் கற்றுக் கொள்ளுங்கள்.

*புனிதமும் சாந்தமும் தவழ்வது பூமியின் முகம் அதை ஏன் அச்சத்தாலும்,
பூசல்களாலும் காயப்படுத்துகிறீர்கள்??

Post a Comment

0 Comments