யாரிடமும் உன்னை நிரூபித்துக் கொள்ளவிரும்பாதே

யாரிடமும் உன்னை நிரூபித்துக்
கொள்ளவிரும்பாதே...



நீ நிரூபித்தாலும் நிரூபிக்காவிட்டாலும்
நீ நீ தான்...

மற்றவர்களுக்கு முன் தன்னை நிரூபிக்க ஆசைப்படுவர்கள் பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மையால் அவதியுறுபுவர்களாகத் தான் இருப்பார்கள்...
அவர்கள் மற்றவர்களிடம் ஆணவத்தை யாசிப்பவர்கள்...

தயவு கூர்ந்து எனக்கு கொஞ்சம் மதிப்பளியுங்கள் என்னை கொஞ்சம் உயர்வாக உணரவையுங்கள் என்று யாசிப்பவர்கள்...

உங்களை மற்றவர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்ற நமச்சலைதவிர்த்து விடுங்கள்...
அப்படி நீங்கள் நிரூபிக்க விரும்புகின்ற மக்கள் கூட்டம் விழிப்புணர்வு அற்றது...

முட்டாள் தனமானவர்களால் சூழ்ந்தது...

மற்றவர் கண்களில் உங்களைப் பார்த்து அதில் தெரியும் ஏதோவொன்றினால் திருப்தி அடைவது அல்லது அடையாளம் காண்பது உங்களை நீங்கள் உணராததே என்பதை ஆழ்ந்து உணருங்கள்...

உங்களை நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள் கூட்டத்திலும் தனித்துஇருங்கள்...
உங்கள் இருப்பை உணருங்கள்...

||ஓஷோ||

Post a Comment

0 Comments