⚡ ஒருமுறை ஓஷோவிடம் ஒருவர் கேட்டார்
“உங்கள் ஆசிரமத்தில் நீங்கள் ஒழுக்கத்தை போதிப்பதில்லையே..??? ஏன்....???” என்று
ஒஷோ சொன்னார்
“பார்வை இழந்தவர்களுக்கு நான் கண்களைத் தருகிறேன்
நீங்கள், ஏன் ஊன்றுகோல் தரவில்லை என்று கேட்கிறீர்கள்” என்று
அறியாமை, பயம் , கோபம்,
இன்னும் பல மனிதனின் பார்வையை மறைத்திருக்கின்றன
“விழிப்புணர்வு” என்கிற வெளிச்சத்தைப் பாய்ச்சி விட்டாலே போதும்
ஊன்றுகோல் எதற்கு...??? என்கிறார் ஓஷோ
தன்னைப் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் உள்ளவர்களுக்கு
ஒழுக்கம் சார்ந்த போதனைகள் தேவையில்லை
ஏனெனில்
விழிப்புணர்வு பெற்ற மனிதன் தன்னைத் தானே பார்த்துக் கொள்கிறான்
அறியாமையில் இருந்து விடுபட்டால் மட்டுமே
மனிதன் மிகச் சிறந்த தன்மைக்கு உயர்வான் என்பதை ஓஷோ உணர்ந்திருந்தார்
அதனை வெறும் போதனையாக மட்டும் சொல்லாமல்
அதற்கான கருவிகளாய்
தியானம், நடனம் போன்றவற்றை வழங்கினார் ⚡
✨ஓஷோ ✨
0 Comments