உண்மையான அர்த்தம்_ ஓஹோ

 உலகத்தின் எல்லா மதங்களும் மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்து வருகின்றன. 


வாழ்வது எப்படி என்பதை அவை போதிப்பதில்லை. வாழாமல் இருப்பது எப்படி? 


வாழ்க்கையைத் துறப்பது எப்படி? உலகைத் துறப்பது எப்படி? என்பதைத்தான் அவை போதித்து வருகின்றன. 


மதங்கள் சொல்லும் இலக்கணப்படி இந்த உலகம் என்பது ஒரு தண்டனை;


 நீங்கள் சிறையில் அடைபட்டிருக்கிறீர்கள். ஆகையால், முடிந்த அளவு விரைவாக அந்தச் சிறையிலிருந்து தப்பித்துவிட வேண்டியதுதான்.


இது பொய். 


வாழ்க்கை என்பது தண்டனையல்ல. தண்டனையாக நினைக்க முடியாத அளவுக்கு வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்தது. 


அது ஒரு பரிசு.


 உங்கள் மூலமாக சுவாசிக்க, உங்கள் மூலமாக காதலிக்க, உங்கள் மூலமாக கீதம் இசைக்க, உங்கள் மூலமாக நடனமாட "இருத்தல்" உங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நீங்கள் நன்றி காட்ட வேண்டும்.


-- ஓஷோ

Post a Comment

0 Comments