பேரின்பம் என்பது

உண்மையில் பேரின்பம் என்பது உங்கள் உள்ளேயிருந்து வருவது.வெளியிலிருந்து வருவது அல்ல.

தனிமையில் பேரின்பம் என்பது தியானம்.

யாரையும் சாராமல் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் எவன் வாழ்கிறானோ அவன்தான் உண்மையிலேயே வாழ்பவன்.

இந்த இன்பம் மட்டுமே காலையிலும்,மாலையிலும்,இளமையிலும்,முதுமையிலும்,  வாழ்கையிலும்,மரணத்திற்கு பிறகும் உங்களுடனேயே இருப்பது.

நீங்கள் உள்ளே தேடிச்செல்லும் யாத்திரை என்பது தனிமையை தேடிச்செல்லும் யத்திரைதான்.

அதில் உங்கள் கொள்கை, கோட்பாடுகள்,மதசடங்குகள்,சட்டதிட்டங்கள்,உங்கள் அன்புக்குறிய காதலி என எதுவும் உங்களுடன் வர முடியாது.

எப்பொழுது உள்ளே செல்ல காலடி எடுத்துவைக்கிறீர்களோ,அபோழுது இந்த உலகம் மறைந்துவிடுகிறது.

அதனால் இந்த உலகம் பொய் என்று அர்த்தம் இல்லை.அது உங்களை விட்டு மறைந்துவிடுகிறது அவ்வளவுதான்.

இந்த உலகம் மறைந்துவிட்ட அந்த நிலையில் இந்த உலகத்தின் சப்தங்களோ,உருவங்களோ உங்களிடம் இருக்காது.

அந்த அமைதியான நிலைக்கு செல்ல உங்களுக்கு மிகவும் தைரியம் வேண்டும்.

அதன் பிறகுதான், அந்த ஆழ்ந்த அமைதியில்தான் பேரானந்தம் வெளிப்படுகிறது.

அந்த தனிமையை கொண்டாடுங்கள்,அந்த மெல்லிய வெளிச்சத்தை,வெட்டவெளியை,அதன் நறுமணம் கூடியதெய்வீக கீதத்தை  அனுபவியுங்கள்.

அந்த கீதம்,நறுமணம் உங்கள் விழிப்புணர்வில்,தியானத்தன்மையிலிருந்து எழுந்தது.

 வேறு எங்குமிருந்து அல்ல.

__osho

Post a Comment

0 Comments