உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய்.

💐 உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய்.....??? 

💐 யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன...???

💐 இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக் கொண்டுள்ளது 

💐 சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா..???



💐 இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை 

💐 உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய் 

💐 உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன்

அது மனதின் வேலை 

💐 உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு

நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு 

💐 எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை 

💐 சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது 

💐 சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது  

அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது 

💐 கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை 

💐 வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது 

💐 இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது 

💐 அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய் 

💐 பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய் 

💐 உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது 

💐 உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது 

💐 இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை 

💐 சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன 

💐 ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை 

💐 தியானம் செய் 

இயற்கையை நேசி

வலிகள் மறையும்

பாராட்டுக்காக
ஏங்கும் நேரத்தில் 

நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார்

இது இயல்பே என எண்ணு 

💐 வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது 

பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை

அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை  

அது இயல்பாய் இருக்கிறது  

அது போல் இயல்பாய் கடமையைச் செய் 💐

🌷 ஓஷோ 🌷

Post a Comment

0 Comments