இப்போதே முடிவெடு

 🍀இப்போதே முடிவெடு 🍀


உனக்கு வேண்டும் என்றால் எல்லாம் சரி தான். உனக்கு வேண்டாம் என்றால் காத்திருந்து அழிக்க விரும்பாதே. இப்போதே முடிவு செய். ஒவ்வொரு கணத்துக்கும் அதனதன் முடிவு உண்டு. ஒவ்வொரு கணத்துக்கும் அதனதன் அவசரம் உண்டு. இந்த கணமே நீ செயலாற்ற வேண்டும்.


ஆனால் என்ன நடக்கிறது. என்னிடம் வருகிறார்கள். எங்களுக்கு ஒன்றும் தெரியாது. தியானம் செய்ய வேண்டுமா வேண்டாமா என்பது எங்களுக்கு தெரியாது என்கிறார்கள். தியானம் செய்வதா வேண்டாமா என்பதை பற்றிய நிச்சயம் இல்லை எனில் முதலாவதாக செய்ய வேண்டியது ஏதோ ஒரு நிச்சயத்திற்கு வருவது தான். அப்படி இல்லை என்றால் எதை செய்தாலும் பாதி மனதுடன் செய்வாய். வருத்தப்படும்படியான காரியத்தைத்தான் செய்வாய். செய்ததை அழிக்க விரும்புவாய். ஆனால் அதற்குள் வெகு சிரமம் ஆகி போகும்.


எதையாவது கற்றுக் கொள்வது சிரமம். கற்றதை கழிப்பது அதை விட சிரமம். எதிலும் நிச்சயமாக இரு. தியானம் வேண்டாம் என்றால் விட்டுவிடு அதில் எந்த தவறும் இல்லை. அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. வேறு வேலைகளை செய். இப்போது என்ன செய்ய விரும்புகிறாயோ அதையே செய் அதுவே உன் தியானம் ஆகட்டும்.


பணம் சம்பாதிக்க வேண்டுமா? அது உன் தியானமாகி விடட்டும். போய் சம்பாதி. ஒருநாள் உண்மை புரியும் விரக்தி வரும். அப்போது சரியான நேரமும் வரும்.


அதிகார பணிகளில் அமர விருப்பமா? செய். நித்தியத்திற்கு எந்த அவசரமும் இல்லை கடவுளுக்கு எந்த அவசரமும் இல்லை அவர் பொறுமையாக இருப்பார். என்ன செய்தாலும் உனக்கு பிடித்ததை செய் வேண்டிய நேரம் இருக்கிறது இதுதான் மறு பிறப்பு பற்றிய நம்பிக்கை. கோடிக்கணக்கான பிறவிகள் இருந்திருக்கின்றன கோடிக்கணக்கான பிறவிகள் இருக்கப் போகின்றன.


வேண்டிய நேரம் எடுத்துக் கொள் எதையும் சுலபமாக எடுத்துக் கொள் பிறர் சொல்வதை பற்றி அஞ்சாதே கவலைப்படாதே  உனக்கு என்ன செய்ய விருப்பமோ அதை செய் செயலாற்றுவதன் மூலமே ஒருவர் வளர்வதும் முதிர்வதும் சாத்தியமாகின்றது.


தியானத்திற்கு இது சரியான நேரம் இல்லையென்றால் அப்படியே இருக்கட்டும் குற்றக் குறுகுறுப்பு ஏதும் வேண்டியதில்லை. இதுதான் தியானத்திற்கான சமயம் என்றால் முழு மனதோடு ஈடுபடு.


பாதி மனதோடு எப்படி நீண்ட யாத்திரை போக முடியும்? மற்றொரு பாதி உன்னை பின்னோக்கி இழுத்துக் கொண்டே இருக்கும். இது இந்த பக்கம் இழுக்க அது அந்த பக்கம் இழுக்க முடிவெடுக்க இயலாமல் நீ சீரழிந்து போவாய். இது தான் நடக்கிறது 


உன் மனம் பிளவுபட்டு கிடக்கிறது. உள்ளே பல குரல்கள் கேட்கிறது கூச்சல் குழப்பம். பல திசைகளில் இருந்தும் அழைப்புகள் எனவே எல்லா திசைகளிலும் ஒரே சமயத்தில் போய்க் கொண்டிருக்கிறாய் ஒரு கை வடக்கு நோக்கி போகிறது இன்னொரு கை தெற்கு நோக்கி போகிறது கால்கள் கிழக்கு நோக்கி நடக்க கண்கள் மேற்கு நோக்கி திரும்பி இருக்கின்றன. இதுதான் உன் சூழ்நிலை. உடைந்து நொறுங்கி விழுகிறாய் என்றால் இயற்கை தான் அது ஒரு விபத்தல்ல நீ ஒருமைப்பட்டவனாக இல்லாம் இருக்கும் வரை அப்படி தான் நடக்கும்.


முடிவெடு. தீர்மானித்துவிடு நிச்சயம் செய்து கொள் எந்த ஒரு கணத்தையும் வீணடிக்க கூடாது என்றால் முதல் அடியை பற்றி முடிவு செய் 


கொழுத்த அடிமரம் கொண்ட மரத்திற்கும் சிறிய முளை தான் தொடக்கம்...  


அது வேண்டும் என்றால் அதற்குள் உன்னை முழுக்க ஊற்றி விடு அது வேண்டாம் என்றால் நாளை வரட்டும் என்று காத்திருக்காமல் இப்போதே வெட்டிவிடுவது நல்லது 


இந்த கணத்தில் முடிவெடு 


#ஓஷோ

Post a Comment

0 Comments