நீ நீயாக இரு

 நீ நீயாக இரு

ஓஷோ,,,,


ஓஷோ சிந்தனைகள்::


நான் உன்னை ஒரு கௌதம புத்தராகவோ,ஏசு கிருஸ்துவாகவோ, மகா காசிப்பாகவோ மாறச் சொல்லவில்லை.


நீ நீயாகவே எவருமறியாதவனாக,

குறிப்பிட்ட முக்கியமற்றவனாக ஆனால் பேரானந்தம் அடைந்தவனாக இருக்க வேண்டும்.


நீ ஏற்கனவே சரியான பாதையில் ஒரு சில அடிகள் எடுத்து வைத்து விட்டாய்.

மேலே செல் : உன்னிடம் நம்பிக்கை கொள்.


ஒவ்வொரு முன்னேறும் அடியிலும் உன் மனவுறுதி ஆழமாகும்.


ஒரு போதும் அறிவுரைகளைக் கேளாதே.!


ஏனெனில் ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்கள்.ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமானவர்கள். ஒப்புவமை இல்லாதவர்கள்.


உன்னைப் போன்ற நபர் உனக்கு முன் இருந்ததுமில்லை,இனி இருக்கப் போவதுமில்லை.ஆகவே உண்மையில் உனக்கென எந்த வழிகாட்டுதல்களும் தேவையில்லை.


ஆனால் வாழ்விருப்பு மிகவும் கருனைமயமானது.அது உன் வாழ்வு முழுவதையும் உனக்கொரு விதை வடிவில் தந்துள்ளது.


நீ எவரையும் கேளாமலே இருந்தாலும்,உனது ஓசையை மட்டும் கேட்டு,அதை பின்பற்றினால் கூட போதும் நீ உன் இருப்பிடம் என நினைக்கும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விடுவாய்.


நீ யார் என்பதை அங்கு உடனே உணர்ந்து கொள்வாய்.அங்கு உன் முழு வாழ்விருப்புடன் ஒரு ஒத்திசைந்த லயத்தை உடனே நீ உணருவாய்.!


ஓஷோ,,,

Post a Comment

0 Comments