ஜென்னில் காணப்படும் அழகு

ஜென் மகத்தான விஷயங்களைப் பற்றி பேசுவதில்லை...!

சின்ன விஷயங்களை மகத்தானதாக்கி விடும்..!அதான் ஜென்னில் காணப்படும் அழகு..!

புதிதாக வந்த சீடன் இடைவிடாது கேள்விகளை அடுக்கினான்...?
குருவே...!
உயிர் என்பது அழியக்கூடியதா..,இல்லையா...?
நம்முடைய உடம்பு மரணத்திலிருந்து தப்பிப் பிழைக்க முடியாதா..?
மறுபிறவி என்பது தவறான கொள்கையா...?
அப்படி பிறவி எடுக்கும் போது பூர்வ ஜென்ம ஞாபகம் இருக்குமா..?இப்படி கேள்விகளால் துளைத்து எடுத்தான்.
குரு சொன்னார்...
உனக்கான "காலை சிற்றுண்டி ஆறிக் கொண்டிருக்கிறது" என்றார்..!
அதான் ஜென் வழி. உங்களை இந்த கணத்திலேயே பிடித்து நிறுத்துவது..!
சொர்க்கத்தைவிட காலை சிற்றுண்டி முக்கியம்..!அது மறுபிறப்பு...ஆன்மா ..சங்கதிகளை விட உடனடி சாத்தியமாக இருக்கிறது.
"ஜென்" னைப் பொறுத்தவரை எது உடனடியானதோ அதுவே முடிவானது.
"ஜென்" ஒரு போதனை அல்ல..!
கனவு காணும் மனதை விழிக்கச் செய்வது.
இந்தக் கணம் மட்டுமே "சாசுவதமானது"..!
இந்தக் கணத்தில் நீங்கள்" விழித்திருக்கு வேண்டும்" என்கிறது...ஜென்...!
# ஜென் தத்துவ கதைகள்..!

------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------

அன்றைய தினம் குரு மடத்தில்....!
குரு மௌனமாய் அமர்ந்திருந்த பொழுது..!
சீடர்களின் சலசலப்பு மெதுவாக அடங்கியது..!
குருவை உற்று நோக்க கணத்த அமைதி நிலவியது..!
சீடர்களும் மிகு‌ந்த அமைதி காத்தனர்..!
குருவின் உபதேசம் கேட்க சீடர்கள் மட்டுமல்ல... அந்த அடர்ந்த கானகமும் காத்திருந்தது..!
மிகவும் கணத்த மௌனம் நிலவிய பொழுது..!
"கீச்" என்று பறவையின் ஒலி கேட்டது..!
குரு மௌனப் புன்னகையுடன்...இன்றைய "உபதேசம் முடிந்தது" என்றார்..!!
நீங்கள் ஆழ்ந்த மௌனத்தில் " பிரபஞ்சத்தின் குரலைக் கேட்கலாம்" என்கிறது..."ஜென்"...!!
# ஜென் தத்துவ கதைகள்..!

------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------

Post a Comment

0 Comments