சக்கரங்களின் குணங்கள்:
உங்கள் சக்தி மூலாதாரத்தில் ஓங்கி இருந்தால், உங்கள் வாழ்க்கையில் உணவும், தூக்கமும்தான் பிரதானமாக இருக்கும்.
உங்கள் சக்தி ஸ்வாதிஷ்டானத்தில் ஓங்கி இருந்தால், இன்பங்களை பின்தொடர்ந்தே தான் உங்கள் வாழ்க்கை இருக்கும் (அ) உடல் அளவிலான பல வகையான இன்பங்கள் உங்களை ஆக்கிரமிக்கும்.
உங்கள் சக்தி மணிபூரகத்தில் ஓங்கி இருந்தால், நீங்கள் செயல்வீரராக இருப்பீர்கள்; உலகத்தில் பல செயல்கள் செய்ய முனைவீர்கள்.
உங்கள் சக்தி அனாஹதத்தில் ஓங்கி இருந்தால், நீங்கள் ஒரு படைப்பாளியாக இருப்பீர்கள்.
உங்கள் சக்தி விஷுத்தியில் ஓங்கி இருந்தால், நீங்கள் சக்திமிக்கவராக இருப்பீர்கள்.
உங்கள் சக்தி ஆக்னாவில் ஓங்கி இருந்தால், அல்லது நீங்கள் ஆக்னாவை அடைந்துவிட்டால், புத்தி அளவில் நீங்கள் உணர்ந்துவிட்டவர் ஆவீர்கள். இந்த நிலை உங்களுக்கு அமைதியைத் தரும்.
அனுபவத்தில் உணரவில்லை என்றாலும் புத்தியில் முழுமையான புரிதல் ஏற்பட்டிருப்பதால், உங்களுக்குள் அமைதியும், நிதானமும் ஏற்படும்.
வெளியுலகத்தில் என்ன நடந்தாலும் அது உங்களை எவ்வகையிலும் பாதிக்காது.
இதை சற்றே கவனித்தால், இது நாம் வாழ்வை வாழும் தீவிரத்தின் ஏழு நிலைகள்.
உண்பதையும், உறங்குவதையும் வாழ்க்கையாகக் கொண்டவரை விட இன்பத்தை நாடுபவருடைய வாழ்க்கை சற்று அதிகமான தீவிரத்துடன் நடக்கிறதா, இல்லையா?
இந்த உலகத்தில் ஏதோ ஒன்றை உருவாக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று வேலையில் இறங்குபவரின் வாழ்க்கை இன்பமே பிரதானமாய் இருப்பவரை விட அதிக தீவிரத்துடன் இருக்கும்.
ஒரு கலைஞரோ அல்லது படைப்பாளியோ, இம்மூவரையும் விட அதிக தீவிரத்துடன் இருப்பார்.
நீங்கள் விஷுத்திக்கு நகர்ந்து விட்டால், அது தீவிரத்தின் முற்றிலும் மாறுபட்ட பரிமாணம்; ஆக்னாவுக்கு நகரும்போது, அது இன்னும் அதிகமாகும்.
சஹஸ்ராரத்தை எட்டிடும்போது, விவரிக்க முடியாத பேரானந்தத்தில் திளைத்திடுவீர்கள். உங்கள் சக்தி சஹஸ்ராரத்தை அடையும்போது, பித்துப் பிடித்தாற் போன்ற பேரானந்தமே உங்கள் நிலையாகும்.
வெளியிலிருந்து எவ்வித தூண்டுதலும் இல்லை, எந்தக் காரணமும் இல்லை, என்றாலும் உங்கள் சக்தி ஒரு உச்சத்தை அடைந்துவிட்டதால் பேரானந்தக் களிப்பில் திளைப்பீர்கள்.
உங்களுக்குள் நீங்கள் உணரும் ஒவ்வொரு உணர்வும் உங்கள் உயிர்சக்தியின் ஒரு வெளிப்பாடுதான்.
கோபம், துயரம், அமைதி, ஆனந்தம், பேரானந்தம் என அனைத்தும் ஒரே சக்தியின் வெவ்வேறு நிலையிலான வெளிப்பாடு. அதனால் இந்த சக்கரங்கள் என்பது ஒருவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள இருக்கும் ஏழு பரிமாணங்கள்.
சக்கரங்களின் சுழற்சி
சக்கரங்கள் அனைத்தும் தொடர்ந்து சுழன்றுகொண்டே யிருக்கின்றன. ஒரு உயிர் பிறந்த கணத்தில் இந்த சுழற்சி துவங்கி விடுகிறது.
வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. எப்போது சக்கரங்களின் சுழற்சி நிற்கிறதோ, அப்போதுதான் மரணம் நிகழுகிறது. ஆக, மரணம் என்பதே சக்கரங்களின் இயக்கம் நின்றுபோவதுதான்.
சக்கரங்கள் இரண்டு திசைகளில் சுற்றமுடியும்.
1. இட வலமாக (Clockwise).
2. வல இடமாக (Anti Clockwise).
எந்த சக்கரம், எந்த திசையில் சுற்றவேண்டும் என்ற நியதி உள்ளது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இது மாறுபடும்.
அட்டவணையிலிருந்து கீழ்க்கண்ட உண்மைகளை மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.
✶ ஆணுக்கு முதல் சக்கரமான மூலாதாரம் இட வலமாகச் சுற்றும்.
✶ பெண்ணுக்கு அதே மூலாதாரம் வல இடமாகச் சுற்றும்.
✶ முதல் சக்கரம் எந்த திசையில் சுழலுமோ அதற்கு எதிர்திசையில் அடுத்த சக்கரம் சுழலும்.
✶ இரண்டாவது சக்கரம் எந்த திசையில் சுழலுகிறதோ, அதற்கு எதிர்திசையில் மூன்றா வது சக்கரம் சுழலும்.
✶ இப்படி, ஒவ்வொரு சக்கரமும் திசை மாறி மாறி சுழலும்.
இப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் சக்கரங்கள் ஒரே திசையில் சுழலு மானால், அவர்களது குணநலன்கள் அனைத்தும் ஒரே மாதிரிதான் இருக்கவேண்டும்அல்லவா?
ஆணின் குணநலன் கள் வேறு; பெண்ணின் குணநலன்கள் வேறு. இருவரது சக்கரங்களும் வெவ்வேறு (எதிர் எதிர்) திசைகளில் சுழழு வதால்தான் இவ்வாறு அமைகிறது. இதுவே இயற்கையின் நியதி.
சில எளிய உதார ணங்கள் மூலம் இதை விளக்கலாம்.
✶ மூலாதாரச் சக்கரம் ஆணுக்கு இட வல மாகச் சுற்றும். இதனால் ஆண் பெரும்பாலும் பூமி சார்ந்த விஷயங்களின்மேல் அதிகப்படி யான நாட்டமும் பிடிப்பும் உள்ளவனாக இருப் பான்.
✶ பெண்ணுக்கு மூலாதாரம் வல இட மாகச் சுற்றுவதால், பூமி சார்ந்த விஷயங்களில் அவளுக்கு நாட்டம் அதிகமிராது.
✶ ஆசைகள் இருவருக்குமே இருக்கும். மண்ணாசை, பொன்னாசை போன்றவை இருவருக்குமே பொது. ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு அவை ஒரு “வெறி’ என்றஅளவிற்கு இருக்கும். பெண்களுக்கு அவ்விதம் இராது.
✶ அனாஹதச் சக்கரமே அன்புச் சக்கரம். ஆணுக்கு இந்த சக்கரம் வல இடமாகச் சுற்றுவதால் அன்பு, இரக்கம், கருணை, பாசம் போன்ற மென் உணர்வுகள் அவனிடம் குறைவாகவே காணப்படும்.
✶ பெண்ணுக்கு அனாஹதம் இட வலமாகச் சுற்றுவதால் ஆணைவிட பெண் ணிடம் இரக்கம், அன்பு, பாசம், கருணை,கனிவு போன்ற மென் உணர்வுகள் அதிகமாகக் காணப்படும்.
✶ ஆக, ஆணுக்கும் பெண்ணுக்கும் சக்கரங்கள் எதிர்எதிர் திசைகளில் சுற்றுவதால் அவர்கள் ஒருவரையொருவர் நிறைவுசெய்கிறார்கள்.
ஒரு ஆணும் பெண்ணும் வாழ்க்கைத் துணையாக இணையும்போது, ஒரு ஆணிடம் உள்ள குறைகளை பெண் நிறைவு செய்கிறாள். பெண்ணிடம் உள்ள குறைகளை ஆண் சமன் செய்கிறான். இவ்வாறு இருக்கும்போதுதான் வாழ்க்கையில் ஒரு நிலைத்தன்மையும் சமத்தன்மையும் உருவாகும்.
ஒரு வீட்டில் கணவன்- மனைவி இருவருமே ஊதாரிகளாக இருந்தால் அந்தக் குடும்பம் என்னவாகும்? ஆண் செலவாளியாக இருந்தால் பெண் சிக்கனமானவளாகவும், பெண் செலவாளியாக இருந்தால் ஆண் சிக்கனமாகவும் இருந்தால் மட்டுமே அந்தக் குடும்பம் சரியாக நடைபெறும்.
சக்கரங்களும் மனநலமும்
நமது உணர்வுகளை ஆளுவது நமது சக்கரங்களேயாகும். ஒரு மனிதனுக்கு அவனுடைய சக்கரங்கள் சுற்றவேண்டிய திசையில் சரியாகச் சுற்றும்போது, அவனது உணர்வு நிலைகளும் மனநிலையும் சரியாக இருக்கும்.
மாறாக, சக்கரங்கள் எதிர்திசையில் சுற்றிக்கொண்டிருந்தால் உணர்வு நிலைகளிலும் அந்த மாற்றம் பிரதிபலிக்கும். இதையும் ஒரு எளிய உதாரணம் மூலம் விளக்கலாம்.
✶ மணிப்பூரகச் சக்கரமே ஆளுமைத் தன்மை, வீரம், தைரியம் போன்ற குணங்களைத் தீர்மானிக்கும் சக்கரமாகும்.
✶ ஆணுக்கு மணிப்பூரகச் சக்கரம் இட வலமாகச் சுற்றும்போது அவன் தைரியம் மிக்கவனாகவும், ஆளுமைத் தன்மை கொண்டவனாகவும் இருப்பான்.
✶ மாறாக, ஒரு ஆணின் மணிப்பூரகச் சக்கரம் வல இட மாகச் சுற்றிக் கொண் டிருந்தால் அவன் கோழையாகவும், ஆளுமைத் தன்மை இல்லாதவனாகவும் மாறிவிடுவான்.
✶ அவனிடம் ஆணின் தன்மைகள் குறைந்து, பெண்மைத் தன்மை மேலோங்கும்.
✶ ஒரு பெண்ணுக்கு மணிப்பூரகச் சக்கரம் வல இடமாகச் சுற்றவேண்டும். அப்போதுதான் அவளிடம் பெண்ணுக்குரிய அச்சம், நாணம் போன்ற தன்மைகள் காணப்படும்.
✶ மாறாக, ஒரு பெண்ணின் மணிப்பூரகச் சக்கரம் இட வலமாகச் சுற்றும்போது, அவள்ஆண் தன்மை கொண்ட பெண்ணாகக் காணப் படுவாள். அவளிடம் பெண்ணுக்குரிய நளினம் மறைந்துபோகும்.
ஆக, ஒரு மனிதனுடைய மனநிலை, உணர்வு நிலைகள், அடிப்படை குணநலன்கள் (Personality) ஆகிய அனைத்துமே சக்கரங்களின் இயக்கங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன. சக்கரங்களின் இயக்கங்களில் மாறுதல் களோ பாதிப்புகளோ ஏற்படும்போது, அவை மனநிலைகளிலும் உணர்வு நிலைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
நோய்களும் சக்கரங்களும்
பெரும்பாலான நாள்பட்ட நோய்களுக்கு மூல காரணமாக அமைவது உணர்வு நிலைகளில்ஏற்படும் மாற்றங்களே என்பதை ஏற்கெனவே இத்தொடரின் இரண்டாம் பாகத்தில் விரிவாகக் கண்டோம்.
உணர்வு நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால், சக்கரங்களின் தொடர்புடைய உடல் உறுப்புகளும் பாகங்களும் பாதிப்படைகின்றன. இதுவே நாளடைவில் நோயாக மாறுகிறது.
சக்கரங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாறுதல்களும் தடைகளும் உணர்வு நிலை களில் மாற்றங்களை உருவாக்கும். இவை சக்தி உடல்களில் மாற்றங்களை உருவாக்கி நோய்களை உருவாக்கும்.
ஆக, அனைத்து நாள்பட்ட நோய்களுக்கும் ஆணிவேராக, மையப் புள்ளியாக இருப்பது சக்கரங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாறுதல் களே!
சக்கரங்களின் இயக்கங்களை சரிசெய்துவிட் டால், நாள்பட்ட நோய்கள் எதுவாக இருந்தா லும் அவை படிப்படியாக மறைந்துபோகும்.
சக்கரங்களின் வண்ணங்கள்
முதன்மைச் சக்கரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட வண்ணம் உண்டு.
வானவில்லின் ஏழு வண்ணங்களே ஏழு சக்கரங்களுக்கும் உரிய வண்ணங்களாகும்.
சகஸ்ராரம்- வயலட்- Violet =V
ஆக்ஞை- இன்டிகோ- Indigo =I
விஷுதி- நீலம்- Blue =B
அனாஹதம்- பச்சை- Green =G
மணிப்பூரகம்- மஞ்சள்- Yellow =Y
சுவாதிஸ்டானம்- ஆரஞ்சு- Orange =O
மூலாதாரம்- சிவப்பு- Red =R
இந்த வண்ணங்களின் முதல் எழுத்துக்களைச் சேர்த்தால் “விப்ஜியார்’ (VIBGYOR) என்று வரும்.
இதை நினைவில் வைத்துக்கொண்டால் வானவில்லின் வண்ணங்களையும், சக்கரங் களின் வண்ணங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.
குறிப்பு
வண்ணங்கள் அனைத்துமே வெவ்வேறு வகையான சக்திகளே. இவையும் மின்காந்த அதிர்வுகளே. அலைநீளத்தைப் பொறுத்து வெவ்வேறு வண்ணங்கள் உருவாகின்றன. சிவப்பு- குறை நிலை சக்தி- சூடு.
வயலட்- உச்சநிலை சக்தி- குளிர்ச்சி.
பிற வண்ணங்கள் இவை இரண்டிற்கும் இடைப்பட்ட சக்தி நிலையைக் குறிக்கின்றன.
இதழ்கள்
✷ சக்கரங்களை தாமரை மலருக்கு ஒப்பிடுவார்கள்.
✷ ஒவ்வொரு சக்கரமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இதழ்களைக் கொண்டுள்ள தாக தந்திர யோகம் குறிப்பிடுகிறது.
✷ குறைந்த எண்ணிக்கை இதழ்கள்- குறைந்த சக்தி நிலை.
✷ அதிக எண்ணிக்கை இதழ்கள்- அதிக சக்தி நிலை.
✷ மூலாதாரம்- 4 இதழ்கள்.
✷ சகஸ்ராரம்- 972 இதழ்கள்.
✷ இந்த இதழ்கள் அந்த சக்கரத்திலிருந்து வெளியே வருகின்ற நாடிகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது.
பஞ்சபூதங்கள்
✷ மூலாதாரம் முதல் விஷுதி வரையுள்ள ஐந்து சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பஞ்சபூதத்திலும் இணைக்கப்பட்டுள்ளன.
✷ ஆக்ஞை, சகஸ்ராரம் ஆகிய இரு சக்கரங்களும் பஞ்சபூதங்களின் ஆளுமைக்கு அப்பாற்பட்டவை.
உடல் பாகங்கள்
✷ ஒவ்வொரு சக்கரமும் சில குறிப்பிட்ட உடல் பாகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
0 Comments