வாழ்வு ஒரு பரிசல்லவா? 💕

வாழ்வு ஒரு பரிசல்லவா? 💕


அதை ஏன் அனுபவிக்கக்கூடாது?


"நீங்கள் உழைத்துச் சம்பாதித்துப் பெற்றதல்ல உங்கள் வாழ்வு"


அதனால்தான்,அது உங்களுக்கு கிடைத்த பரிசு என்கிறேன்.


இயற்கை உங்களுக்குத் தந்த பரிசு.அதை கடவுள் தந்த பரிசு என்றாலும் சரி.


பரிசு பரிசுதான்.நல்ல பரிசு.தூய பரிசு.


இதைப்பெற நீங்கள் எதையுமே செய்யவில்லை.


அப்புறம் ஏன் இதை ஆனந்தப் பரவசத்தோடு அனுபவிக்கக்கூடாது?


ஆடிப்பாடி மகிழ வேண்டாமா?


--ஓஷோ--

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 அழகான விஷயங்களுக்கு 

உயிர் கொடுங்கள்.  


அசிங்கமான விஷயங்களுக்கு 

உயிர் கொடுக்காதீர்கள்.  


உங்களுக்கு அதிக நேரம் இல்லை, வீணடிக்க அதிக ஆற்றல் இல்லை.  


இவ்வளவு சிறிய வாழ்க்கையுடன், இவ்வளவு சிறிய ஆற்றல் மூலத்துடன், 


சோகத்திலும், கோபத்திலும், வெறுப்பிலும், பொறாமையிலும் 

அதை வீணாக்குவது முட்டாள்தனம்.  


அதை அன்பில் பயன்படுத்துங்கள்.

சில ஆக்கபூர்வமான செயலில் பயன்படுத்துங்கள்.

நட்பில் பயன்படுத்துங்கள்.

தியானத்தில் பயன்படுத்துங்கள்.


அது உங்கள் கைகளில் உள்ளது.  


                - ஓஷோ

Post a Comment

0 Comments