உண்மையை வார்த்தைகளால் சொல்ல முடியாத போது ஏன் புத்தர்கள் வார்த்தைகளை உபயோகித்தார்கள் <3
உண்மையை வார்த்தைகளால் சொல்ல முடியாத போது ஏன் எல்லா புத்தர்களும் வார்த்தைகளை உபயோகித்திருக்கிறார்கள்.
ஒரு சிறிய கதை.
பாஸ்ரா தேசத்து ரபியா (RABIA OF BASRA) என்பவள் மிகமிக அழகானவள் .
அது மாத்திரமல்ல .
அவள் ஒரு மிகச்சிறந்த ஞானியும் கூட.
ஒரு சமயம் ஈரான் தேசத்திலிருந்து ஒருவன் பாஸ் ராவுக்கு வந்தான் .
அவன் " இங்கு விசேஷமானதும் வேறு எங்கும் காண முடியாததும் ஏதாவது உண்டா ? என்று விசாரித்தான்
அதற்கு மக்கள் " ஆமாம் உண்டு. உலகத்திலேயே மிக அழகான பெண் ஒருத்தி இங்கு இருக்கிறாள் "என்றார்கள்
அந்த வாலிபன் மிகவும் உற்சாகமாக "அவளை நான் எங்கே காண முடியும் ?"என்று ஆர்வமாக கேட்டான்.
மக்கள் மெல்ல சிரித்தவாறு
" அவளை ஒரு விபச்சார விடுதியில் தவிர வேறு எங்கே காண்பது ?" என்றார்கள்.
அது அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது .
ஆனால் கடைசியில் அவளை அங்கே சென்று சந்திக்க முடிவு செய்தான் .
அந்த விடுதியின் தலைவி அவளை சந்திக்க மிக அதிகமான தொகையை கேட்டாள் .
அவனும் அதைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றான்.
அங்கே ஒரு சிறிய எளிமையான மற்றும் ,அமைதி நிறைந்த ஓர் அறையில் ,
ஓர் உருவம் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதைக் கண்டான்.
என்ன அழகு என்று அதிசயப்பட்டான்.
அவள் முகத்தில் காணப்பட்ட அழகும் கவர்ச்சியும் இதுவரை அவன் வேறு எங்கேயும் காணவில்லை,
ஏன் கனவுகளில் கூட காணவில்லை.
அவன் அங்கே இருப்பதையே ஒரு ஆசீர்வாதமாக கருதினான்.
அங்கே நிலவும் மிகவும் வித்தியாசமான சக்திவாய்ந்த சூழ்நிலை அவனை மிகவும் பாதித்தது.
அவன் தன் இச்சையை முற்றிலும் மறந்து விட்டான் .
அவன் ஏதோ வேறு ஓர் உலகத்துக்குள் நுழைவதை உணர்ந்தான் .
அவன் போதை மருந்து சாப்பிட்டது போன்ற ஒரு மயக்க நிலையில் கடவுளை நோக்கி தான் செல்வதை உணர்ந்தான்.
சில மணி நேரம் கழித்து தான் ஒரு கோயிலில் இருப்பதை உணர்ந்தான்.
ஆஹா என்ன அமைதி என்ன மகிழ்ச்சி அவளுடைய அழகை அள்ளிப் பருகினான் .
ஏனென்றால் அந்த அழகு மனிதர்களுக்கு உரியதல்ல அது கடவுளுடைய பேரழகு.
அந்த முக அழகுக்கும் அவளுடைய உடம்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .
அது முழுக்க முழுக்க வேறு ஓர் உலகத்தை சார்ந்தது.
பிறகு ரபியா மெல்ல தன் கண்களைத் திறந்தாள் .
அவை தாமரை மலர்போல் அவ்வளவு அழகாக இருந்தன .
அவன் அந்த கண்களை ஆழ்ந்து நோக்கினான் ,
அப்பொழுது தன் முன்னால் ஒரு பெண் அமர்ந்திருக்கவில்லை என்றும்,
தான் கடவுளுக்கு முன்னால் அமர்ந்து இருக்கிறோம். என்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது .
அதைப்போல அவன் அன்று இரவு முழுவதும் அப்படியே அமர்ந்திருந்தான்.
அது ஒரு நொடி போல காணப்பட்டது.
அதாவது அந்த அழகில் அவன் இரண்டறக் கலந்துவிட்டான்.
சூரியன் மெல்ல எழும்பி காலை கதிர்கள் அந்த அறையில் ஜன்னல்கள் வழியாக உள்ளே வந்தன.
அப்பொழுதுதான் அவன் தான் அங்கிருந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தான்.
பிறகு அவன் " நான் உன்னுடைய அடிமை
நீ ஏதாவது என்னிடம் கேள் .
இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் கேள் .
நான் உனக்கு செய்ய தயாராக இருக்கிறேன் " என்று அவளிடம் பணிவாக சொன்னான்
அவள் " நீ எனக்கு செய்ய வேண்டியது ஒரு சிறிய வேண்டுகோள் மட்டுமே ".
அவன் மிகுந்த ஆர்வமாக " சொல்லுங்கள் செய்ய காத்திருக்கிறேன்"
அவள் " இங்கே நீ பார்த்ததையும் அனுபவித்ததையும் வேறு யாரிடமும் ஒருபோதும் சொல்லக்கூடாது.
மக்கள் தானாகவே என்னிடம் வரட்டும் .
இந்த என்னுடைய முக அழகு ஒரு மென்மையான பொறியாக இருக்கட்டும் .
நான் இந்த அழகை மக்கள் கடவுளிடம் செல்ல ஒரு கதவாக உபயோகிக்கிறேன்.
ஆகவே,
இன்று இரவு நீ அடைந்த அனுபவத்தை வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடு.
அவர்கள் இந்த விபச்சார விடுதிக்கு இச்சையுடன் தானே வரட்டும் .
ஏனென்றால் ,அவர்கள் வேறு எதையும் என்னிடம் எதிர்பார்த்து வரமாட்டார்கள் .
இது அவர்களுக்கு ஒரு புதிய எதிர்பாராத அனுபவமாக இருக்கட்டும் " என்றாள்.
அவன் ஆச்சரியமாக " ஹோ ! இதுதான் இந்த நகரத்தின் ரகசியமா ?
இந்த நகரமே உங்களுடைய அழகை புகழ்கிறது .
ஆனால் யாருமே இங்கு அடைந்த அனுபவத்தை சொல்லவே இல்லை " என்றான்.
ரபியா சிரித்துக்கொண்டே " ஆமாம் நான் இங்கு வருபவர்களிடம் சத்தியம் வாங்கி விடுகிறேன் " என்றாள்.
இங்கு ரபியா தன்னுடைய தெய்வீக அழகை ஒரு பொறி போல உபயோகப்படுத்துகிறாள்.
அதைப்போல புத்தர் தன் வார்த்தைகளையும் ,கிருஷ்ணர் தன் புல்லாங்குழலையும், மீரா தன் நாட்டியத்தையும் ,ஒரு பொறியாகவே உபயோகித்தார்கள்.
உங்களை இப்படித்தான் ஆன்மீக பொறியில் மாட்ட வைக்க வேண்டும் .
நீங்கள் அறிந்தவற்றின் மூலமாகவே உங்களை பொறி வைத்து பிடிக்க வேண்டும் .
உங்களை நீங்கள் அறிந்தவற்றிலிருந்து ,
நீங்கள் இது வரை அறியாத ஒன்றுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
ஆனால் , ஆரம்பம் நீங்கள் அறிந்தவற்றிலிருந்து தான் எழும்ப வேண்டும்.
நீங்கள் ஒரு பெண்ணின் கவர்ச்சியை புரிந்து கொள்கிறவர் .
ஒருவனுக்கும் தன் வாலிப வயதில் பொதுவாக கடவுளைத் தேட வேண்டும் என்ற ஆர்வம் இருக்காது.
அவனுக்கு அப்பொழுது ஒரு பெண்ணின் கவர்ச்சி ,
மற்றும் அவளுடைய உடலின் கதகதப்பில் மிகவும் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறான் .
அதையே ஒரு பொறியாக வைக்கிறோம் .
இந்த கதையில் அந்த வாலிபன் கவர்ச்சியை தேடிப் போகிறான்.
ஆனால் ,
அவன் ரபியா முன்னிலையில் அவனுடைய கவர்ச்சி ,ஆர்வம், இச்சைகள் மெல்ல மாறி ஒரு பிரார்த்தனை ஆகிவிட்டது.
உங்களால் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியும் .
ஆகவேதான் புத்தர்கள் வார்த்தைகளை உபயோகித்தார்கள்.
-- ஓஷோ --
0 Comments