இரு புருவங்களுக்கு மத்தியில் கவனம் வை

 *இரு புருவங்களுக்கு மத்தியில் கவனம் வை*...


🍁 இந்த யுக்திதான் பித்தகோரஸுக்கு கொடுக்கப்பட்டது.


🍁 பித்தகோரஸ் இந்த யுக்தியுடன்தான் கிரேக்க நாட்டிற்கு திரும்பினார்.


🍁உண்மையில் அவர்தான் மேற்கத்திய ஞானதேடலின் ஊற்றுக்கண்ணாக... பிறப்பிடமாக... மாறினார்.


🍁மேற்கத்திய ஞானமார்க்கத்தின் தந்தை இவரே.


🍁மாபெரும் கிரேக்க தத்துவஞானி பித்தகோரஸ், எகிப்து நாட்டின் ஒரு பள்ளியில் சேரச் சென்றார்.


🍁"மனம் தாண்டிய புதிர்களைப் பற்றிய இரகசிய பள்ளி"--- 

அவர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.


🍁"இதுவரை உருவாக்கப்பட்டவைகளிலயே மிகச்சிறந்த ஒரு மனம்" பித்தகோரஸ்.


🍁அவரால் ஏன் நம்மை சேர்க்க மறுக்கிறார்கள்... என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.


அவர் மறுபடியும் மறுபடியும் விண்ணப்பித்தார்.


*அவர் ஒரு குறிப்பிட்ட உணவு  உட்க்கொள்ளாமல் இருப்பது*... 


மற்றும்...


மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டாலொழிய...


அவரை பள்ளியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டனர்.


🍁பித்தகோரஸ் கூறினார்...


"நான் அறிவிற்காக வந்தேன், எந்தவித ஒழுக்கப் பயிற்சிக்காகவும் அல்ல."


ஆனால், பள்ளியின் நிர்வாகிகள் சொன்னார்கள்.


"நீ மாறுபாடு அடையவில்லை என்றால்... எங்களால் உனக்கு அறிவைக் கொடுக்கமுடியாது.


🌸உண்மையில் நாங்கள் அறிவின் மேல் ஆர்வம் உடையவர்கள் அல்ல.


நாங்கள் நிஜமான அனுபவத்தில் ஆர்வம் கொண்டவர்கள்.

வாழாத...அனுபவப்படாத வரையில்...

எந்த அறிவும் அறிவல்ல.


🌸ஆகவே, நீ நாற்பது நாட்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.


அப்போது ஒரு குறிப்பிட்ட முறைப்படி மூச்சு விடவேண்டும்.


அதோடு சில குறிப்பிட்ட புள்ளிகளைப் பற்றிய குறிப்பிட்ட விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்.


வேறு எந்த வழியும் இல்லை.


🌸ஆகவே, பித்தாகோரஸ் இந்தப் பயிற்சியை மேற்கொண்டு தேர்ச்சி பெற வேண்டியிருந்தது.


🌸நாற்பது நாட்கள் உண்ணாமல்...

மூச்சு பயிற்சி செய்து கொண்டு...

விழிப்போடு...

கவனமாக இருந்த பின் அவர் பள்ளியில் சேர அனுமதிக்கப்பட்டார்.


🌸பித்தகோரஸ் கூறினார்...


"நீங்கள் பித்தகோரஸை உள்ளே அனுமதிக்கவில்லை.


ஆனால்...


நான் வேறு மனிதன்...

நான் மறுபிறப்பு எடுத்துள்ளேன்...


*நீங்கள் சரி நான் தவறு*.


 ஏனெனில்...

அப்போது என் முழு அணுகுமுறையும் அறிவுப்பூர்வமானது.


இந்த தூய்மைபடுத்துதலின் பயனாக...


எனது ஜீவனின் மையம் மாறிவிட்டது.


அது அறிவுப்பூர்வமானதிலிருந்து...

கீழே இறங்கி...

இதயத்திற்கு வந்துவிட்டது... 


🌸இப்போது விஷயங்களை என்னால் உணரமுடியும். 


இந்த பயிற்சிக்கு முன்பாக என்னால் அறிவுப்பூர்வமாக மட்டுமே...

தலை மூலமாக மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.


ஆனால்...

இப்போது என்னால் உணர முடியும்.


இப்போது சத்தியம்...உண்மை...என்பது... 

எனக்கு ஒரு கோட்பாடு அல்ல...

வாழ்க்கை.


அது ஒரு தத்துவமாக இருக்கப்போவதில்லை.


இது ஒரு அனுபவமாக...

பிரபஞ்ச இருப்பாக... இருக்கும்.


எகிப்தில் கொடுக்கப்பட்ட இந்த யுக்தி... இந்தியாவினுடையது.


இந்த யுக்தி வெகு ஆழமான முறைகளில் ஒன்று.


இதை புரிந்துகொள்ள முயற்சி செய்: *புருவங்களுக்கு மத்தியில் கவனம் வை*.."


🌸தற்போதைய உடலியல், விஞ்ஞான ஆராய்ச்சி சொல்கிறது...


🌸இரண்டு புருவங்களுக்கும் இடையில் உள்ள சுரப்பிதான் உடலிலேயே மிகவும் புதிரான பாகமாக உள்ளது.


இந்த சுரப்பி, பீனியல் சுரப்பி என்றழைக்கப்படுவது...


திபெத்தியர்களின்மூன்றாவதுகண். *சிவநேத்ரா* அதாவது சிவனின் கண், தந்த்ராவின் கண்.


🌸இரண்டு கண்களுக்கு இடையில் "மூன்றாவது கண்" ஒன்று உள்ளது. 

ஆனால்...அது வேலை செய்வதில்லை.

அது அங்கு உள்ளது.

அது எந்தக் கணத்திலும் வேலை செய்ய முடியும்.


"புருவங்களுக்கு மத்தியில் கவனம் வை."


உன் கண்களை மூடு...

பிறகு உனது இரு கண்களையும்...


இரண்டு கண்களுக்கு மத்தியில் குவி...


🌸கண்களை மூடிக்கொண்டு,

ஆனால், இரண்டு கண்களாலும் நீ பார்ப்பதை போல...

அதில் முழு கவனத்தையும் கொடு.


🌸கவனத்தோடு இருப்பதற்கு உரிய மிக எளிமையான ஒரு முறை இது.


நீ இவ்வளவு சுலபமாக உடலின் வேறு எந்தப் பாகத்தை குறித்தும் கவனத்தோடு இருக்க முடியாது.


இந்த சுரப்பி...கவனத்தை...

மற்ற எதையும் விட அதிகம் ஈர்த்து கொள்கிறது.


🌸நீ இதற்கு கவனத்தை கொடுத்தால்...


உன் இரண்டு கண்களும் இந்த மூன்றாவது கண்ணால் வசியம் செய்யப்படுகிறது.


அவை அசைவில்லாமல் ஆகிவிடும். 

அவை நகர முடியாது.


🌸பழைய தந்த்ரா நூல்களில்...


*மூன்றாவது கண்ணிற்கு உணவு*... *கவனம்தான் என்று சொல்லப்பட்டுள்ளது*.


🌸அது பிறவி...பிறவியாக பசியோடு இருக்கிறது.


 அதற்கு நீ "கவனம்" கொடுத்தால்...அது துடிப்புக்கு வரும். 

அது உயிர்துடிப்படைகிறது !!


"மூன்றாவது கண்ணைநோக்கும்போது...


திடீரென்று நீ ஒரு பார்வையாளனாக...


சாட்சிபாவம் கொண்டவனாக மாறுகிறாய்."


மூன்றாவது கண்ணின் மூலம் 

நீ எண்ணங்களை வானத்தில் ஓடும் மேகங்களை போல பார்க்க முடியும்.


ஓஷோ

Post a Comment

0 Comments