இருமுனை அம்பாக இரு

 👁‍🗨👁‍🗨👁‍🗨👁‍🗨👁‍🗨👁‍🗨👁‍🗨👁‍🗨👁‍🗨👁‍🗨

🏹 இருமுனை அம்பாக இரு


பொதுவாக அனைவரும் நம் சக்தியை வெளியே வீசிக் கொண்டிருக்கிறோம்


யாருமே அந்த சக்தியை சேகரிப்பது இல்லை


நான் இப்போது உங்களிடம் பேசும்போது 


நான் பேசுவதை நீங்கள் கவனிக்கிறீர்கள்


அப்போது நீங்கள் என்னுடைய தன்னுணர்வில் இருக்கிறீர்கள்


இது ஒருமுனை அம்பை போன்றது


அம்பை வெளியே வீசிக்கொண்டிருக்கிறீர்கள்


இதை வேறு வகையில் கவனிக்க முடியும்


நான் பேசுவதையும் கவனித்து, 


கூடவே நீங்கள் கவனித்து கொண்டிருப்பதையும் கவனியுங்கள்


இப்போது உங்களுடைய தன்னுணர்வில் இருக்கிறீர்கள்


இருமுனை அம்பாக இருங்கள்


நாம் அனைவரும் பிறந்த சில மாதங்கள் வரை 


இருமுனை அம்பாகவே இருந்தோம்


காலப்போக்கில் தூங்கி விட்டோம்


ஒரு பிறந்த குழந்தை தன்னையே வேறொரு ஆளாக பார்க்கிறது


அப்போது யாருடைய கோபமும் அதை பாதிப்பதில்லை


இதை முயற்சி செய்து பாருங்கள்


உங்களை ஒருவர் கோபப்படுத்தும்போது 


அவர் உங்களிடம் கோபமாக பேசுவதை கவனியுங்கள்


கூடவே, கோபமாக இருக்கும் உங்களையும் சேர்த்து கவனியுங்கள்


இருமுனை அம்பாய் மாறிவிடுங்கள் 🏹


📿 ஓஷோ 📿

Post a Comment

0 Comments