ஓஷோ தந்த்ரா ரகசியங்கள் 2

 பாலுணர்ச்சியோடு சண்டை போடுபவர்கள் விரைவில் விந்தை வெளியேற்றி விடுவார்கள். 


ஏனெனில் இறுக்கமான மனம் இறுக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்ள அவசரப்படுகிறது.


புதிய ஆராய்ச்சிகள் பல ஆச்சரியமான விஷயங்களை, பல ஆச்சரியமான உண்மைகளைக் கூறுகின்றன.


 அப்போது எழுபத்தி ஐந்து சதம் ஆண்கள் உச்ச நிலைக்கு முன்பே விந்தை வெளியேற்றுபவர்களாக இருப்பதை உணர்ந்தனர்.


எழுபத்து ஐந்து சதவிகித ஆண்கள்! ஒரு ஆழமான சந்திப்பிற்கு முன்பே அங்கு அவர்கள் விந்தை வெளியேற்றி விடுகின்றனர். 


செயல் முடிந்து விடுகிறது.


மேலும் தொண்ணூறு சதம் பெண்கள் ஒருபோதும் எந்த உச்ச உணர்வையும் அடைந்த தில்லை. 


அவர்கள் ஒருபோதும் ஒரு உச்சியை, ஒரு ஆழத்தை, நிறைவு செய்யும் சிகரத்தைத் தொட்டதில்லை - தொண்ணூறு சதம் பெண்கள்?!


இதனால்தான் பெண்கள் இவ்வளவு கோபமாகவும், கடுகடுப் போடும் இருக்கிறார்கள். அவர்கள் அப்படித் தான் இருப்பார்கள். அவர்கள் தாங்கள் வாழும் ஆணோடு சுமூகமாக இருப்பதற்கு எந்த தியானமும் உதவ முடியாது. எந்தத் தத்துவமும், எந்த மதமும்,


எந்த ஒழுக்கமும் உதவ முடியாது. அவர்கள் விரக்தியில், கோபத்தில் இருக்கிறார்கள். ஏனெனில் நவீன கால விஞ்ஞானம் பழைய தந்த்ரா இரண்டுமே சொல்கின்றன. அதாவது ஒரு பெண் விந்துணர்வுத் தன்மையில் ஆழமாக நிறைவடையாவிட்டால் அவள் குடும்பத்தில் பிரச்சினையாகவே இருப்பாள்.


அவளுக்கு இருக்கும் அந்தக் குறையால் கடுகடுப்பு உருவாகிறது. அவள் எப்பொழுதும் சண்டை போடும் ஆழ் உணர்விலேயே இருக்கிறாள்.


எனவே உனது உனது மனைவி ஒரு சண்டை போடும் ஆழ் உணர்விலிருந்தால் முழு விஷயத்தைப் பற்றியும் திரும்பவும் யோசி.


காரணம் மனைவியிடம் அல்ல -நீயே கூட காரணமாய் இருக்கலாம். மேலும் பெண்கள் விந்துணர்வை அடைவதில்லை என்பதால் அவர்கள் பாலுணர்ச்சிக்கு எதிராக மாறி விட்டனர். அவர்கள் பாலுணர்ச்சிக்குள் செல்ல சுலபத்தில் விருப்பப்படுவ தில்லை.


அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். அவர்கள் பாலுணர்ச்சிக்குள் செல்லத் தயாராக இருப்பதில்லை. அவர்கள் ஒருபோதும் எந்தவித ஆனந்தத்தையும் அதன் மூலம் அடையாத போது, அவர்கள் ஏன் தயாராக இருக்க வேண்டும்? மேலும் அதன் பின் அவர்கள் அந்த மனிதன் தன்னை பயன்படுத்திக் கொண்ட தாகவே உணருகின்றனர்.


தேவையான பொழுது ஒரு பொருளை பயன்படுத்தி விட்டு பிறகு ஒதுக்கி விடுவது போலவே அவர்கள் உணருகினறனர்.


ஒரு ஆண் திருப்தியடைந்து விடுகிறான். ஏனெனில் அவன் விந்தை வெளியேற்றி விட்டான். பிறகு அவன் நகர்ந்து தூங்கப் போய்விடுகிறான். அந்த மனைவி அழுது கொண்டிருக்கிறாள். அவள் வெறுமனே பயன்படுத்தப்பட்டாள்.


மேலும் அந்த அனுபவம் எந்த விதத்திலும் அவளுக்கு நிறைவைக் கொடுக்க வில்லை. அது அவளது கணவனுக்கு அல்லது காதலனுக்கு அல்லது நண்பனுக்கு ஒரு விடுதலையைக் கொடுக்கலாம். ஆனால் அது அந்த விதத்திலும் அவளுக்கு நிறைவளிப்பதாய் இல்லை.


தொண்ணூறு சதவிகிதப் பெண்களுக்கு விந்துணர்வு என்றால் என்ன என்றே தெரியாது. அவர்கள் ஒருபோதும் அதை அறிந்ததில்லை.


அவர்கள் உடல் முழுவதும் துடிக்கும். அந்த ஆனந்தத்தை, ஒவ்வொரு நாடி நரம்பும் அதிரும், ஒவ்வொரு செல்லும் உயிர்த் துடிப்புக்கு வரும், அந்த சிகரத்தை ஒருபோதும் தொட்டதில்லை. அவர்கள் அதை அடைந்ததேயில்லை.


மேலும் இதற்குக் காரணம் சமுதாயத்தின் பாலுணர்ச்சிக்கு எதிரான அணுகுமுறையே. சண்டைபோடும் மனம் அங்கிருக்கிறது. மேலும் அந்தப் பெண், அவள் மிகவும் உறைந்து போகுமளவு அடக்கி வைத்திருக்கிறாள்.


அந்த ஆண் அந்தச் செயலை அது ஏதோ ஒரு பாவம் என்பதைப் போல செய்து கொண்டே போகிறான். அவன் அதைக் குற்றமாக உணர்கிறான். அது செய்யக் கூடாதது. மேலும் அவன் தனது மனைவியுடன் அல்லது காதலியுடன் புணர்ந்து கொண்டிருக்கும் போது, அவன் ஏதோ ஒரு மகாத்மாவை - ஏதோ ஒரு துறவி என்று அழைக்கப்படுபவரை - நினைத்துக் கொண்டிருக்கிறான்.


மேலும் அவன் பாலுணர்வில் ஈடுபட்ட பிறகு அந்த மகாத்மாவிடம் எப்படிப் போவது, எப்படி இந்த பாலுணர்ச்சியை, இந்தக் குற்றத்தை, இந்தப் பாவத்தைக் கடந்து போவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.


மகாத்மாக்களை விட்டு விடுவது மிகவும் கடினமான காரியம். நீ புணர்ந்து கொண்டிருக்கும் போது கூட அவர்கள் அங்கிருக் கிறார்கள். நீங்கள் இருவரல்ல! ஒரு மகாத்மாவும், அங்கு இருக்கிறார். அப்படி மகாத்மா அங்கில்லாவிட்டால் அப்போது கடவுள் நீ இந்தப் பாவத்தை செய்வதை கவனித்துக் கொண்டிருக் கிறார்.


மக்களின் மனதில் கடவுள் என்ற கருத்து ஒரு வெறும் எட்டிப் பார்க்கும் சிறுவனாகவே இருக்கிறது. அவர் எப்பொழுதும் உன்னைக் கவனித்துக் கொண்டே இருக்கிறார் -


இந்த அணுகு முறை பதற்றத்தை உருவாக்குகிறது. பதற்றம் அங்கு இருக்கையில், விந்து வெளியேற்றம் விரைவில் நடந்து விடுகிறது.


பதற்றம் அங்கு இல்லாத பொழுது, விந்து வெளியேறுவதை மணிக் கணக்கில் ஒத்திப் போட முடியும் -நாட்கணக்கில் கூட,


மேலும் அங்கு அதற்குத் தேவையே இல்லை. அன்பு ஆழமாக இருந்தால் இருவரும் ஒருவருக்கொருவர் சக்தி அளிக்க முடியும்.


அப்போது விந்து வெளியேற்றம் முற்றிலும் நின்று விடுகிறது. வருடக் கணக்கில் இரு காதலர்களும் எந்த விந்து வெளியேற்றமும் இல்லாமல், சக்தி எந்த விதத்திலும் விரையமாகாமல், ஒருவருக் கொருவர் சந்தித்துக் கொள்ள முடியும்.


அவர்கள் ஒருவருக் கொருவர் தளர்த்திக் கொள்ள முடியும். அவர்களது உடல்கள் சந்திக்கும்; தளர்வடையும். அவர்கள் பாலுணர்ச்சியில் நுழைவார்கள், தளர்வார்கள்.


மேலும் விரைவிலோ சிறிது கழித்தோ பாலுணர்ச்சி ஒரு கிளர்ச்சியாக இருக்காது. அப்போது அது ஒரு கிளர்ச்சியல்ல; அது ஒரு தளர்த்திக் கொள்ளல் - ஒரு ஆழமான, அதன் போக்கில் விட்டு விடுதல்.


நீ முதலில் உனக்குள், வாழ்வு சக்தியிடம் சரணாகதியானால் மட்டுமே அது நடக்க முடியும். அப்போது மட்டுமே நீ உனது காதலி அல்லது காதலனிடம் சரணடைய முடியும். தந்த்ரா இது நிகழ்வதைச் சொல்கிறது. மேலும் அது எப்படி நிகழ முடியும் என்பதையும் சொல்கிறது.


தந்த்ரா சொல்கிறது: நீ கிளர்ச்சியோடு இருக்கும் பொழுது ஒருபோதும் கலவியில் ஈடுபடாதே.


இது மிகவும் அபத்தமாகத் தோன்றுகிறது. ஏனெனில் நீ கிளர்ச்சியோடு இருக்கும் போதே நீ புணர விரும்புகிறாய். மேலும் சாதாரணமாகப் பங்கு கொள்ளும் இருவரும் ஒருவருக்கொருவர் கிளர்ச்சியூட்டிக் கொள்கின்றனர். அப்போதுதான் அவர்கள் புணர முடியும்.


ஆனால் தந்த்ரா சொல்கிறது: அதாவது கிளர்ச்சியோடு இருக்கையில் நீ சாந்தமாக, தியானத்தோடு இருக்கையில் அன்பு செய். முதலில் தியானம் செய்; பிறகு அன்பு செய்; மேலும் நீ அன்பு செய்யும் போது, புணரும் போது, எல்லையைக் கடந்து போகாதே.


எல்லையைக் கடந்து போகாதே என்று நான் சொல்வதன் அர்த்தம் என்ன? கிளர்ச்சியும் வன்முறையும் அடையாதே. அப்பொழுதுதான் உனது சக்தி சிதறாமல் இருக்கும்.


நீ பாலுணர்ச்சி சக்தி ஓட்டத்தோடு போனால், முழு சரணாகதி அடைந்தால், விரைவிலோ அல்லது சிறிது கழித்தோ நீ ஒரு நிலைக்கு வந்து சேர்வாய்.


அங்கு பாலுணர்ச்சி புது வாழ்க்கைக்கு பிறப்பு கொடுப்பது மட்டுமல்ல... பாலுணர்ச்சி அதிக வாழ்க்கையையும் கொடுக்க முடியும் என்பதை அறிவாய். காதலர்களுக்கு பாலுணர்ச்சி ஒரு வாழ்வை கொடுக்கும் சக்தியாக மாற முடியும்.


ஆனால் அதற்கு சரணாகதி தேவை. ஒருமுறை நீ சரணடைந்து விட்டால், பல பரிமாணங்கள் மாறுகின்றன.


உதாரணமாக, தந்த்ரா அறிந்திருக்கிறது. தாவோ அறிந்திருக்கிறது. அதாவது நீ புணர்ச்சியின் போது விந்தை வெளியேற்றி விட்டால் அப்போது அது உனக்கு வாழ்வைக் கொடுப்பதாக இருக்க முடியாது.


அங்கு விந்தை வெளியேற்ற வேண்டிய அவசியம் இல்லை. விந்து வெளியேற்றத்தை முற்றிலும் மறந்துவிட முடியும்.


தந்த்ரா, தாவோ இரண்டும் சொல்கின்றன: விந்து வெளியேற்றம் ஏனெனில் நீ சண்டையிடுகிறாய், இல்லாவிட்டால் அதற்கு அங்கு தேவையே இல்லை.


காதலனும் காதலியும் ஆழமான பாலுணர்ச்சித் தழுவலில் இருக்கமுடியும். ஒருவரில் ஒருவர்தளர்வடைந்து கொண்டு, விந்தை வெளிப்படுத்துவதில் அவசரப்படாமல், அந்த நிகழ்வை முடிக்க அவசரப்படாமல் இருக்க முடியும்.


அவர்கள் வெறுமனே ஒருவருக்குள் ஒருவர் தளர்வு கொள்ள முடியும். மேலும், இந்த தளர்வு கொள்ளல் முழுமையானதாய் இருந்தால், அவர்கள் இருவரும் வாழ்வை அதிகமாக உணர்வார்கள். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் வளப்படுத்துவார்கள்.


தாவோ சொல்கிறது... ஒரு மனிதன் ஓராயிரம் வருடம் வாழ முடியும். அவன் பாலுணர்ச்சியில் எந்த அவசரமும் காட்டாமல் இருந்தால், அவன் ஆழமாக தளர்வுற்று இருந்தால், ஒரு பெண்ணும் ஆணும் ஒருவரில் ஒருவர் ஆழமானத் தளர்வு நிலையில் இருந்தால் ஒருவருள் ஒருவர் கரைந்திருந்தால் ஒருவரில் ஒருவர் ஆழ்ந்திருந்தால் எந்த அவசரமும் இல்லாமல், எந்த இறுக்கமும் இல்லாமல் இருந்தால், பல விஷயங்கள் நிகழும்.


ரசவாத மாற்றங்கள் நிகழும் - ஏனெனில் இருவரின் வாழ்வின் சாரமும் இருவரின் மின்சாரமும், இருவரின் உடலியல் சக்தியும் சந்திக்கின்றன.


மேலும் இந்த சந்திப்பால், அவை எதிரெதிரானதாக இருக்கும் காரணத்தால் ஒன்று எதிர்நிலை மற்றொன்று ஆதரவு நிலை - அவர்கள் எதிர்துருவங்கள் - ஒருவரையொருவர் ஆழமாகச் சந்திக்கும் பொழுது, அவர்கள் ஒருவருக்கொருவர் சக்தி அளிக் கின்றனர்.


ஒருவர் மற்றொருவரை உயிர் துடிப்புள்ளவராக்கு கின்றனர். அதிக வாழ்வைத் தருகின்றனர்.


அவர்கள் நீண்ட நாள் வாழ முடியும். மேலும் அவர்கள் ஒரு போதும் முதுமையடையாமல் வாழ முடியும்.


__ஓஷோ.

தந்த்ரா ரகசியங்கள் 2.

Post a Comment

0 Comments