பதில் போதுமா

 ❣️❣️❣️<3  கேள்வி  , பதில் , தீர்வு   <3 


ஜப்பானில் ஒரு மரபு உள்ளது. 


எப்பொழுதாவது ஒருவன் ஜென் மாஸ்டரை பார்க்க வந்தால் அவன் தன்னுடன் சிறிய பாயை கொண்டு வரவேண்டும். 


அதை விரித்து அதில் அமர்ந்துகொண்டு தன்னுள் எழுந்த கேள்வியை கேட்பான். 


அப்புறம் அவன் அந்த பாயை அங்கேயே விட்டு செல்வான்.


 எப்பொழுதெல்லாம் அவன் பதில் தேடுகிறானோ அப்பொழுதெல்லாம் அவன் அங்கே வந்து அவனது பாயிலேயே அமர்ந்து கேள்வி கேட்பான். 


இவ்வாறு தொடர்ந்து கேள்வி கேட்டும் பதில் பெற்றும் ஒரு நாள் இதில் சோர்வடைந்து விடுவான்.


 ஒரு நாள் அவன் தன் பாயை எடுத்து சுருட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டு கிளம்புவான்.


 அப்போது அந்த ஜென் மாஸ்டர் கேட்ப்பார் “உன் பாயை சுருட்டிக் கொண்டாயா?’ ”நல்லது உனக்கு எனது ஆசீர்வாதங்கள்”


பாயை சுருட்டிக் கொள்வது என்பது கேள்வி கேட்டு பதில் பெறுவதில் சோர்வடைதலுக்கான ஒரு குறியீடு. 


அப்போதே அவன் இரண்டையும் நிறுத்தி விடுகிறான் 


அவன் தியானத்தில் ஆரம்பிக்கிறான்.


எனவே


 என்று நீ உன் பாயை சுருட்டிக் கொண்டு ஓடுவாயோ அன்று உன்னை நான் நிறுத்தி இன்னும் நிறைய கேள்விகளை கேள் என்பேன். 


இல்லை போதும் 


என்று நீ ஓடினால் உன்னை நான் வாழ்த்துவேன்.


நீ கேள்வி கேட்க விரும்புகிறாய் ஆனால் தயங்குகிறாய். அதனால் நான் கேள் என்று ஊக்குவிக்கிறேன். 


அதற்கு பதிலளித்தால் நீ இன்னும் கேட்பாய் என்பதால்


. நீ சோர்வடைய வேண்டும். 


முற்றிலும் இதில் சோர்வடைய வேண்டும். 


சோர்வடைந்து ”போதும்” என்று சொல்ல வேண்டும். 


போதும் கேள்வியும் வேண்டாம் பதிலும் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.


 அக்கணம் உன் மனது சோர்வடைந்திருக்கும் அதை ஒரு மூளையில் ஒதுக்கி வைத்து இனி எனக்கு அனுபவம் தான் வேண்டும் பதில்கள் அல்ல என்பாய். 


எனக்கு தீர்வுதான் வேண்டும் வெறும் பதில்கள் அல்ல என்பாய். 


அந்த தீர்வு  தியானத்தில் தான் வரும்.


-- ஓஷோ --❣️❣️

Post a Comment

0 Comments