கடவுள் மீது அன்பு செலுத்துவது எப்படி ?

 ஒருவர் மற்றொருவர் மீது செலுத்தும் அன்பு எப்படி இருக்க வேண்டும் ? 

கடவுள் மீது அன்பு செலுத்துவது எப்படி ? 


ஓஷோவின் பதில் :


அன்பு என்பது பிறரை நேசிப்பதுதான் .. 

உள்ளத்தில் அன்பு இல்லாமல் பிறரை ஒருக்காலும் நேசிக்க முடியாது ..


ஆனால் தற்போதைய உலகில் அன்பு ஒரு வியாபாரமாகி விட்டது ...


யாரும் கைம்மாறு கருதாமல் பிறர் மேல் 

அன்பு செலுத்துவது இல்லை ..


கணவன் மனைவியிடம் தனது உடலையும் நாக்கையும் திருப்திபடுத்த வேண்டும் என்று நினைக்கிறான்.


மனைவியோ தன் உடல் சுகத்தையும் பாதுகாப்பையும் கணவனிடம் எதிர்பார்க்கிறாள்.


தாய் மகனிடம் தன் பிற்கால வாழ்வுக்கு ஊன்றுகோலாக இருந்து ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள்.


இப்படி ஒவ்வொருவரும் பிறரிடம் எதையாவது எதிர்பார்த்துதான் 

அன்பு செலுத்துகின்றனர்.


*இதற்குப் பெயர் அன்பு இல்லை*.

*அது ஒரு வியாபார பரிமாற்றம்*.


அப்படி என்றால் உண்மையான அன்பு

என்றால் என்ன ? 

இதை யாரிடம் எதிர்பார்க்கலாம் ? 


இந்த உலகத்தில் இருந்து எதையுமே எதிர்பார்க்காத...

*ஒரு_உண்மையான_ஞானியின்*_

*அன்பே_உண்மையானது*


அடுத்து நீங்கள் உங்களையே நேசித்தால் 

அன்பு செலுத்தினால்...

அது கடவுளுக்கு செலுத்தும் அன்புதான்


ஏனென்றால் நீங்கள்தான் 

கடவுளின் அம்சம்.


ஞானிகளிடம் அது மலர்ந்திருக்கிறது ..


உங்களிடம் அது இன்னும் கருவின் 

நிலையில் உள்ளது.


ஞானி அதை அடையாளம் கண்டு கொண்டு விட்டார் 

உங்களால் இன்னும் முடியவில்லை ..

அவ்வளவுதான் வித்தியாசம்.


நான் அறிந்த ஓஷோ ..

Post a Comment

0 Comments