காலம் காலமாக ஆண்கள் பெண்களைத் தியானம் செய்ய விடுவதில்லை

 காலம் காலமாக ஆண்கள் பெண்களைத் தியானம் செய்ய விடுவதில்லை. ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தைப் பெறவிடுவதில்லை.  வேதங்களைப் படிக்கவிடுவதில்லை.  உலகத்தின் மிகச் சிறந்த சாத்திரங்களைப் படிக்கவிடுவதில்லை.  உபநிடதங்களைப் படிக்கவிடுவதில்லை. 

        பெண்ணின் உடம்பு இருக்கும் வரை விமோசனம் கிடையாது என்று சமணம் சொல்கிறது.  முதலில் ஆணாக பிறக்க வேண்டுமாம்.  பிறகுதான் விமோசனமாம்.  பெண்ணின் உடலில் இருந்து கடவுளிடம் போய் சேர வழியே இல்லையாம்.

  .     ஏன் எதற்காக இந்தப் பயம்? . இதில் மனோதத்துவம் இருக்கிறது.  தன்னைவிடப் பெண் மகிழ்ச்சியடைகிறாள் என்றால் ஆணுக்கு எதோ ஒரு பயம்.  தன்னை விட  நிம்மதியாக இருக்கிறாள் என்றால் அவனுக்குப் பயம் வந்துவிடுகிறது.   தன்னை விட லயத்தோடு இருக்கிறாள் என்றால் பயம்.  தன்னை விட ஒருங்கிணைந்தவளாக இருக்கிறாள் என்றால் பயப்படுகிறான்.   

       ஏனென்றால் ஆண்கள் அந்த அளவுக்கு லயத்தோடு இருப்பதில்லை.  ஒருங்கிணைந்த ஜீவிதம் இருப்பதில்லை.  முழுமையோடும் ஜீவிதத்தோடும் இயைந்து போகும் லயம் அவனிடம் இருப்பதில்லை.  ஆண்களை விடப் பெண்கள் இந்த லயத்தைச் சுலபமாக சாதிக்கிறார்கள்.  உடலளவிலான சில காரணங்களால் ஆண்களை விடப் பெண்கள் வெகு சுலபமாக தியானத்தில் ஆழ்ந்துவிடுகிறார்கள்.  ஆணின் சக்தி ஆளுமை கொண்டது . பலாத்காரம் கொண்டது. புறம் நோக்கித் திரும்பியிருப்பது . 

        பெண்ணின் சக்தி உள் நோக்கியது.  சகிப்புத் தன்மை கொண்டது.  உள்ளே ஆழ்ந்துவிடுவது.

         எனவே சமணம் சொல்வது முழுக்கத் தவறானது . முழுக்கத் தவறானது மட்டுமல்ல . அதற்கு நேர் எதிரிடையானதுதான் உண்மை.

         பெண்ணின் உடலில் ஒரு லயம் இருக்கிறது . ஆணின் உடலில் ஒரு லயம் இருப்பதில்லை . பெண்ணின் உடல் சமனப்பட்டிருக்கிறது . முழுமை கொண்டது . அதனால் தான் பெண் என்றாலே அழகு என்றாகிப் போய்விட்டது. பெண்ணின் உடலில் இறுக்கம் இருப்பதில்லை . செளகரியமான ஒரு தளர்வு இருக்கிறது . 

       பெண்ணின் உடலில் இருந்து கொண்டு கடவுளை அடைவது ஆணாக இருந்து சாதிப்பதை விட சுலபம். 

ஓஷோ

Post a Comment

0 Comments