மெல்ல நடந்துசெல்லுங்கள்

 மிகவும் மெல்ல நடந்துசெல்லுங்கள், ஒவ்வொரு அடியும் மிகவும் உணர்வுப்பூர்வமாக எடுத்துவையுங்கள். என்று புத்தர் அவரது சீடர்களுக்கு அடிக்கடிக் கூறுவார்.


நீங்கள் ஒவ்வொரு அடியும் உணர்வுப்பூர்வமாக எடுத்துவைக்கின்றபோது நீங்கள் மெல்ல நடப்பதற்கு கற்றுக்கொள்கின்றீர்கள்.


வேகமாக அவசரப்பட்டு ஓடிக்கொண்டிருப்பீர்களேயானால் நீங்கள் எதையும் நினைவில்கொள்வதற்கு மறந்துவிடுவீர்கள். இருப்பினும் புத்தர் மெல்லவே நடந்துசெல்கின்றார்.


மிகவும் மெல்ல நடந்துசெல்லுங்கள். உங்களது உடலில் புதியவிதமான விழிப்புணர்வு நிகழத் தொடங்குகிறது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியம் கொள்வீர்கள்.


மெல்ல சாப்பிடுங்கள். மாபெரும் ஓய்வைப் பெறுவீர்கள் என்பதைக் கண்டு ஆச்சரியம் கொள்வீர்கள்.


பழைய பழக்கவழக்கங்களை மாற்றி ஒவ்வொன்றையும் மெதுவாகவே செய்யுங்கள்.


பழைய பழக்கங்களை விட்டு வெளியே வாருங்கள் .


-- #ஓஷோ --


#படித்ததில்_பிடித்தது 


Post a Comment

0 Comments