*♦உன் எந்தப் பகுதியும் முட்டாள் தனமானது என்று சொல்லாதே. கடவுளைத் திட்டுவது போலாகும்.*
*♦எதையும் நிந்திக்காதே. கடவுள் நிந்தனையாகிப் போகும்.*
*♦நீ முழுமையில் இருந்து வந்தவன். முழுமைக்கு உன்னை விட அதிகம் தெரியும்.*
*♦முழுமையின் அந்த ஞானத்தைச் செயல் படுத்த விட்டுவிடு.*
*♦உன்னுடைய சில்லறை மனதைச் சண்டையிடக் கொண்டு வராதே.*
*♦ஆற்றை எதிர்த்து நீந்துவதில் எந்தப் பயனும் இல்லை. எங்கேயும் போய்ச்சேர மாட்டாய். களைத்துத் தான் போவாய்.*
*♦போராடாதே. இருப்பதை அப்படியே இருக்க விட்டுவிடு. இதுதான் ஏற்றுக்கொள்ளுதல். அப்படியே விட்டுவிடுதல்.*
*♦முழுக்க ஓய்வு பெற்றுக் கொண்டவனைப் போல் வாழக் கற்றுக்கொள்.*
*♦எதைச் செய்தாலும் எப்படி வாழ்ந்தாலும் இயல்பாகச் செய். இயல்பாக வாழ்.*
*♦நடப்பதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் எதையாவது செய்ய வேண்டுமானால் செய்.*
*♦ஒன்றும் செய்ய வேண்டாம் என்றிருந்தால் சும்மா இருந்துவிடு.*
*♦போகப்போக இயற்கையின் போக்குக்கு வந்து சேர்ந்து விடுவாய். மேலும் மேலும் இயற்கையானவன் ஆகிவிடுவாய்.*
*எந்த அளவுக்கு இயற்கையானவன் ஆகிறாயோ அந்த அளவுக்கு ஆன்மீகத்துக்குள் போய்விடுகிறாய்.*
... ஓஷோ
0 Comments