யூத கதை

 நான் மிகவும் அழகான யூத கதையைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன்


அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது 


 அது ஒரு மனிதனைப் பற்றிய கதை.


அவன் எப்போதும் தூக்க கலக்கத்தில் இருந்தான்.


 எல்லா இடங்களிலும் எப்போதும் தூங்குவதற்கு தயாராக இருந்தான்.


 பெரிய பொது கூட்டங்களிலும், எல்லா இசை நிகழ்ச்சிகளிலும், எல்லா முக்கிய ஆலோசனை கூட்டங்களிலும், அவன் அமர்ந்து தூங்கிகொண்டிருப்பதை பார்க்கமுடியும்.


உனக்கு கண்டிப்பாக அந்த மனிதனை தெரிந்திருக்கும் 


நீ அந்த மனிதனை பலமுறை கடந்திருப்பாய், 


 அவனை நீ எப்படி ஒதுக்க முடியும்? 


அந்த மனிதனே நீதானே


உன்னால் உன்னை ஒதுக்கவே முடியாது


நினைத்துக்கூட பார்க்ககூடிய  அனைத்து நிலைகளிலும் அவன் தூங்கினான்.


 அவன் தனது முழங்கையை காற்றில் மடித்து தனது கைகளை தனது தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு தூங்கினான். 


அவன் நின்றுகொண்டு, விழாமல் இருப்பதற்காக சாய்ந்துகொண்டு தூங்கினான். 


அவன் திரை அரங்கத்திலும், தெருக்களிலும், மசூதிகளிலும் தூங்கினான். 


அவன் எங்கே சென்றாலும் அவனுடைய கண்கள் தூக்க மயக்கத்திலேயே இருக்கும்.


அவன் இந்துவாக இருந்திருந்தால் அவன் தலைகீழாக நின்றுகொண்டு

சிரசாசனத்தில் கூட தூங்கியிருப்பான்.


 நான் இந்துக்கள் அவ்வாறு தூங்குவதை பார்த்திருக்கிறேன். 


பல யோகிகள் தலைகீழாக நின்றுகொண்டு தூங்குவதில் திறமைசாலிகள். 


அது கடினம், கஷ்டமான காரியம், அதற்கு மிக பயிற்சி தேவை – ஆனால் அது நடக்கிறது.


அவன் ஏற்கனவே ஏழு பெரிய அக்னிகளை தூங்கி கடந்துவிட்டதாக பக்கத்து வீட்டுகாரர்கள் கூறுவார்கள்,


 ஒருமுறை ஒரு பெரிய தீ விபத்தில் அவனை படுக்கையில் இருந்து தூக்கி பக்கத்து சந்தில் வைத்துவிட்டனர், 


அவன் இன்னமும் தூங்கிகொண்டிருந்தான். 


ரோந்து வந்தவர்கள் அவனை கூட்டிசெல்லும் வரை அவன் சில மணிநேரங்கள் அந்த சந்தில் தூங்கிகொண்டிருந்தான்.


அவன் கல்யாணத்தில் மந்திரம் சொல்லும் போது பாதியில் தூங்கிவிட்டான் 


அவனுடைய தலையில்  அடித்து அவனை எழுப்பினார்கள். 


அவன் மெதுவாக அடுத்த வார்த்தையை சொல்லிவிட்டு திரும்பவும் தூங்கிவிட்டான்.


நீ தாலி கட்டியதை நினைத்துப் பார்.


 உன்னுடைய தேன் நிலவை நினைத்துப் பார். 


உன்னுடைய கல்யாணத்தை நினைத்துப் பார். 


எப்போதாவது விழித்துகொண்டுள்ளாயா?


 நீ எப்போதாவது தூங்ககூடிய வாய்ப்பை தவறவிட்டுள்ளாயா?


 நீ எப்போதும் தூங்கிகொண்டேயிருக்கிறாய்!


நம்முடைய கதாநாயகனை பற்றி சொல்லபோகும் கதையை நீ நம்புவாய் என்பதற்காகவே இவ்வளவும் சொல்கிறேன்.


ஒருமுறை, அவன் தூங்கிவிட்டான், அவன் தூங்கினான், தூங்கினான், தூங்கிகொண்டேயிருந்தான், 


ஆனால் தூக்கத்தில் வெளியே தெருக்களில் இடிஇடிப்பது போல சத்தம் கேட்பதாக பட்டது, 


அவனுடைய படுக்கையும் லேசாக ஆடியது, 


 அவன் அவனுடைய தூக்கத்தில் வெளியே மழை பெய்கிறது என நினைத்துக்கொண்டான், அதன் காரணமாக அவனுடைய தூக்கம் இன்னும் இனிமையானதாக மாறியது.


 அவன் போர்வையிலும், அதனுடைய இதமான சூட்டிலும் தன்னை சுருட்டிக்கொண்டான்.


தூக்கத்தில் எத்தனை முறை விஷயங்களை எப்படியெல்லாம் அர்த்தபடுத்தியுள்ளாய் என நினைவு இருக்கிறதா? 


சில சமயங்களில் நீ அலாரம் வைத்திருப்பாய், அது சத்தம் போடும்போது நீ சர்ச்சில் இருப்பதாகவும் அங்கு மணிகள் சத்தமிடுவதாகவும் கனவு காணத் தொடங்குவாய்.


 அலாரத்தை ஒதுக்குவதற்கான, அலாரம் உண்டாக்கும் தொந்திரவை ஒதுக்குவதற்கான மனதின் ஒரு சாதுரியம்.


அவன் எழுந்தபோது அவன் ஒரு ஆச்சரியகரமான சூனியத்தை கண்டான்,


 அவனுடைய மனைவி இல்லை, அவனுடைய படுக்கை இல்லை, அவனுடைய போர்வை இல்லை. 


அவன் ஜன்னல் வழியாக பார்க்க விரும்பினான்,  ஆனால் பார்ப்பதற்கு அங்கு ஜன்னல் இல்லை. 


அவன் மூன்று மாடிகள் கீழே ஓடி உதவி என கத்த விரும்பினான் ஆனால் ஓடுவதற்கு படிகளும் இல்லை கத்துவதற்கு காற்றும் இல்லை. 


அவன் வெறுமனே வெளியே செல்ல விரும்பியபோது, வெளியே என்று ஏதுமில்லை என்பதை அவன் கண்டான்.


 அனைத்தும் காணாமல் போய்விட்டது


சிறிது நேரம் என்ன நடந்துள்ளது என்பதை கிரகிக்கமுடியாமல் குழப்பத்தில் அங்கேயே நின்றான்.


 ஆனால் பிறகு அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான், நான் தூங்கபோகிறேன். 


ஆனால் அப்படித் தூங்குவதற்கு இனி எந்த பூமியும் இல்லை என்பதை அவன் கண்டான்.


பிறகுதான் அவன் இரண்டு விரல்களை நெற்றியில்

வைத்துக்கொண்டு யோசிக்க தொடங்கினான். 


உலகத்தின் முடிவு வரை தூங்கிவிட்டேன் என்பது தெளிவாகிறது. இதன் மூலமாக


, “நான் என்ன செய்திருக்கிறேன் பார்!” என்று கர்வப்பட்டுக்கொள்ளப்படவேண்டிய ஒன்றுதான்.


ஆனாலும் அவன் சோகத்தில் ஆழ்ந்தான்.


 இனி உலகம் இல்லை,  உலகமில்லாமல் நான் என்ன செய்வேன், 


நான் எங்கு வேலைக்கு செல்வேன், நான் எவ்வாறு வாழ்வை மேற்கொள்வேன்,


 முக்கியமாக இப்போது தினசரி செலவினங்கள் மிக அதிகமாகிவிட்டன,


 ஒரு டஜன் முட்டை விலை இருபது டாலராகிவிட்டது. 


அவை புதியனவா என்பது யாருக்கும் தெரியாது, அது தவிர கேஸ் கம்பெனி எனக்கு தர வேண்டிய ஐந்து டாலர்கள் என்னவாவது?


 என்னுடைய மனைவி எங்கே சென்றிருக்கிறாள்? 


அவளும் இந்த உலகத்தோடு நான் பாக்கெட்டில் வைத்திருந்த முப்பது டாலர் பணத்தோடு மறைந்திருக்ககூடிய வாய்ப்பு உண்டா? 


அவள் மறைந்துபோகக்கூடிய குணமுடையவள் அல்ல, என்று அவனே அவனுக்குள் நினைத்துக்கொண்டான்.


திடீரென உலகம் மறைந்துவிட்டால் நீயும் இவ்வாறே நினைப்பாய். 


உனக்கு வேறெதுவும் நினைக்கத் தெரியாது. 


நீ முட்டையின் விலையைப் பற்றியும், அலுவலகத்தை பற்றியும், மனைவி மற்றும் பணம் குறித்தும் நினைத்துக்கொள்வாய்.


 வேறெதைபற்றியும் சிந்திக்க உனக்குத் தெரியாது. 


முழு உலகமும் மறைந்துவிட்டது –


 ஆனால் நீ உன்னுடைய சிந்தனையில் இயந்திரத்தனமாகிவிட்டாய்.


நான் தூங்க நினைத்தால் என்ன செய்வது? 


உலகம் இல்லாவிட்டால் நான் எதில் படுப்பேன்? 


என்னுடைய முதுகு வலித்தால்?,

கடையில் இருக்கும் வேலைகளை யார் முடிப்பது? 


எனக்கு மால்ட் வேண்டுமென்றால் எங்கு கிடைக்கும்?. 


ஒரு மனிதன் தூங்கும்போது  உலகம் அவன் தலைக்கடியில் இருந்தது ஆனால் எழும்போது உலகம் இல்லை என்பதை போல எங்காவது பார்த்திருக்கிறீர்களா? என்று அவன் நினைத்துக்கொண்டான்.


இது ஒருநாள் இல்லை ஒருநாள் நடக்கப்போகிறது 


சாகும்போது ஒவ்வொரு மனிதனுக்கும் இதுதான் நடக்கிறது. 


திடீரென முழு உலகமும் மறைந்துவிடுகிறது. 


திடீரென அவன் இந்த உலகத்தின் பகுதியல்ல. 


திடீரென அவன் இன்னொரு பரிமாணத்தில் இருக்கிறான். 


இது இறக்கும் எல்லோருக்கும் நடக்கிறது, 


ஏனெனில் நீ அறிந்தவை எல்லாம் மேலோட்டமானவையே. 


நீ இறக்கும் பொழுது, திடீரென உனது மேல்தளம் மறைந்துவிடுகிறது 


நீ உனது மையத்தை நோக்கி தூக்கி எறியப்படுகிறாய். 


உனக்கு அந்த மொழி தெரியாது.


 உனக்கு மையத்தை குறித்து எதுவும் தெரியாது. 


அது சூனியத்தை போல, வெறுமையாக காட்சியளிக்கிறது. 


வெற்றிடமாக, ஏதுமின்றி இருப்பது போல தெரிகிறது.


நமது கதாநாயகன் உள்ளாடையுடன் நின்று என்ன செய்வது என யோசித்துகொண்டிருந்தபொழுது, அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.


 போனால் போகட்டும், எந்த உலகமும் இல்லை, அது யாருக்கு வேண்டும்?

மறைந்தது மறைந்துவிட்டது – நான் திரைப்படத்துக்கு சென்று நேரத்தை கழிக்கிறேன். 


ஆனால் அவன் ஆச்சரியபடும்படி உலகத்தோடு திரையரங்குகளும் மறைந்துவிட்டன என்பதைக் கண்டான்.


மிகவும் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டுவிட்டேன், என நினைத்துக்கொண்டே நமது கதாநாயகன் மீசையை தடவத் தொடங்கினான். 


தூங்கியதன் மூலம் மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கிவிட்டேன் நான் ஆழ்ந்து தூங்காமல் இருந்திருந்தால் எல்லாவற்றோடும் நானும் மறைந்திருப்பேன் என அவனை அவனே திட்டிக்கொண்டான். 


அப்படி பார்த்தால் நான் அதிர்ஷ்டம் இல்லாதவன், எனக்கு மால்ட் எங்கு கிடைக்கும் காலையில் அதை குடிக்க எனக்கு பிடிக்கும். 


என்னுடைய மனைவி? அவள் யாரோடு மறைந்தாள் என யாருக்கு தெரியும்? 


அது மேல்தளத்தில் இருக்கும் அந்த துணி தேய்ப்பவனாக இருந்தால், நான் அவளை கொன்றுவிடுவேன். கடவுளே எனக்கு உதவி செய்.


எவ்வளவு நேரம் கடந்துவிட்டது என்று யாருக்கு தெரியும்?


இந்த வார்த்தைகளை கூறியபடியே நமது கதாநாயகன் அவனுடைய கைகடிகாரத்தை பார்க்க விரும்பினான்


 ஆனால் அது எங்கே என்று தெரியவில்லை. 


அவன் இரு கைகளாலும் முடிவில்லாத வெற்றிடத்தில் வலது இடது பைகள் இருக்குமிடங்களில் தேடினான் ஆனால் தொடுவதற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.


நான் இப்போதுதான் கடிகாரத்திற்கு இரண்டு டாலர்கள் கொடுத்துள்ளேன் இதோ அது ஏற்கனவே மறைந்துவிட்டது, என அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான். 


சரி உலகம் பாதாளத்திற்கு போயிருந்தாலும், அது பாதாளத்திற்கு போய்விட்டது. அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அது எனது உலகமல்ல.


 ஆனால் கடிகாரம்! ஆனால் என்னுடைய கடிகாரம் ஏன் பாதாளம் போகவேண்டும்?


 புதிய கடிகாரம். இரண்டு டாலர்கள். 😏😏


 மால்ட் எனக்கு எங்கு கிடைக்கும் காலையில் மால்ட்டை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. 


யாருக்கு தெரியும் ஒருவேளை என்னுடைய மனைவி…. 


மோசமான அழிவின் போது தூங்கியிருக்கிறேன், எனக்கு மோசமானதுதான் நடக்கும். 


உதவி, உதவி, உ-த-வி! என்னுடைய மூளை எங்கே? 


முன்பே என் மூளை எங்கு போயிற்று?


 உலகத்தையும் என்னுடைய மனைவியையும், அவள் இளமையாக இருக்கும் போதே பார்த்துக்கொள்ளவில்லை, நான் ஏன் அவைகளை மறைந்து போக விட்டுவிட்டேன்?


நமது கதாநாயகன் சூனியத்தில் தலையை முட்டிக்கொள்ள தொடங்கினான், 


ஆனால் சூனியம் மிகவும் லேசாக இருந்த காரணத்தால் அது அவனை காயப்படுத்தவில்லை, 


அதனால் அவன் இக்கதையை சொல்வதற்கு உயிரோடு இருந்தான்.


இது மனித மனத்தின் கதை.


 நீ உன்னைச் சுற்றி கற்பனை உலகத்தை உருவாக்கியுள்ளாய். 


நீ சாகும்போது உன்னுடன் வரமுடியாத பொருட்கள் மீது பற்று வைத்துக்கொண்டே செல்கிறாய்.


 உன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்படக்கூடிய பொருட்களோடு உன்னை நீ அடையாளபடுத்திக் கொள்கிறாய்.


*#ஓஷோ*

Post a Comment

0 Comments