லாவோட்சுவும், கன்பூசியஸிம், புத்தரும், மூன்று கோப்பை பானமும்

 💝 லாவோட்சுவும், கன்பூசியஸிம், புத்தரும், மூன்று கோப்பை பானமும் 🤙

.

சொர்கலோகத்தில் ஒரு மதிய வேளையில் பிரபலமான உணவகம் ஒன்றில் லாவோட்சு,

கன்பூசியஸிஸ்,புத்தர் மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்


நிர்வாணமாக அழகான இளம் பெண் ஒருத்தி தட்டில் மூன்று கோப்பைகளில் திரளான திராட்சை ரசம் ஏந்தி, 


இது 'வாழ்க்கை பானம் 'என்று அவர்களுக்கு கொடுத்தாள் 

.

புத்தர் உடனடியாக கண்களை மூடிக்கொண்டார்


முதலாவதாக ஒரு பெண், அதுவும் நிர்வாணமாக ....


அவர் தன் சீடர்களை அழகாக ஆடை அணிந்த ஒரு பெண்ணைக் கூட பார்க்க அனுமதித்தில்லை


அவர் அந்த பானத்தை அருந்தவே இல்லை


வாழ்க்கையைத் துறக்க அவர் தம்முடைய சீடர்களுக்குக் கற்பித்திருந்தார் 


அதற்காக தன் உயிரையே தியாகம் செய்துள்ளார்


இப்போது ''வாழ்க்கை பானம்' ருசிக்கலாம் என்றால் 


இது நாள் வரை தான் மேற்கொண்ட கொள்கைக்கு எதிராக அமையும்


மேலும் 


லாவோட்சு, கன்பூசியஸிஸ்க்கு எதிரில் புத்தர் அருந்த தயாரில்லை


அது அவரது ஈகோவிற்கு எதிராக இருந்தது.

அவர் மிக உயர்ந்த புத்தர்,


தன் நிலையில் இருந்து தவற முடியாது


ஆகவே ருசி பார்க்காமலேயே 'வாழ்க்கை ஒரு துயரம் 'என்றார்

.

கன்பூசியஸ் நடைமுறை வாழ்விற்க்கு ஒத்து வரக்கூடியவர்


அவர் அந்த பெண்ணை மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக பார்த்து விட்டு அனைத்தும் சரியாக அமைந்துள்ளன என்றார்


அவர் வரலாற்றிலேயே ஒரே நடைமுறை மாஸ்டர், மிகவும் நடைமுறைக்கேற்றவர் அவர்


அந்த பானத்தை கொண்டுவாருங்கள் 


வாழ்க்கையின் சுவை என்னவென்று எனக்குத் தெரியாது என்பதால் என்னால் முழுமையாக சொல்ல முடியாது


என் சீடர்களுக்கும் வருங்கால தலைமுறைகளுக்கும் என் வாழ்க்கையை பலியிட்டு விட்டேன்


அதனால் நான் அதை ருசித்ததில்லை


தவறவிட்டதை அனுபவிப்பதற்காக சிறிது அருந்துகிறேன் என்றார்


பின்னர் அதை ஒரு மிடறு குடித்து விட்டு, 'வாழ்க்கை பானம் ' ஒரே கசப்பு 


புத்தர் சொன்னது சரி தான் என்றார்


.

லாவோட்சு மூன்று கோப்பைகளையும் எடுத்துக் கொண்டு,


ஒருவர் மூன்றையும் குடித்து பார்க்காமல் எதைச் சொல்ல முடியும்...???


என்று எல்லாக் கோப்பைகளையும் குடித்து விட்டு நடனமாடத் தொடங்கினார்

.

புத்தரும், கன்பூசியஸசிம் அவரிடம் ' நீங்கள் எதுவும் சொல்லப் போவதில்லையா ' எனக் கேட்க 


இதையே நான் சொல்ல விரும்புவது 


எனது நடனமும் பாடலும் எனக்காகப் பேசுகின்றன என்றார்


ஒரு போதும் முழுமையாக ஒன்றை சுவைக்காமல் நீங்கள் எதையும் சொல்ல முடியாது

.

புத்தர் ஒரு முனை கன்பூசியஸிஸ் நடுவில்


லாவோட்சுவோ புத்தரின் கோப்பை, கன்பூசியஸின் கோப்பை


தனக்கான கோப்பை என மூன்றையும் குடித்துவிட்டு வாழ்வின் மூன்று பரிமாணங்களிலும் வாழ்பவராகிறார்


என்னுடைய அணுகுமுறை லாவோட்சுவினுடையது


வாழ்க்கையை அதன் எல்லாப் பரிமாணங்களிலும் வாழுங்கள்


மேலும் ஒன்றுக்கு எதிராக மற்றொன்றோ, நடுநிலையோ,

சமநிலையோ வேண்டாம்


சமநிலை என்பது பழகக்கூடிய ஒன்றல்ல


வாழ்க்கையை அதன் எல்லாப் பரிமாணங்களிலும் அனுபவிக்கும் போது கிடைக்ககூடிய ஓன்று 


அது இயல்பாக நடக்கக்கூடியது அது


உங்கள் முயற்சியால் கொண்டு வரக்கூடியது அல்ல


அப்படி உங்களின் முயற்சியால் கொண்டு வந்தால் 


அது திணிக்கப்பட்டதாக பொய்யானதாக இருக்கும்

.

வாழ்வை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழாதீர்கள்


வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்


சில சமயம் கசப்பின் சுவை இருக்கவே செய்யும்


அதனாலென்ன கசப்பின் சுவை இனிப்பின் சுவையை உங்களுக்கு உணரச் செய்யும்


கசப்பின் சுவையை அறிந்தால்தான் இனிப்பின் சுவையை சிலாகிக்க முடியும்

.

நான் நடுவழியை போதிக்கவில்லை


முழுவழியை போதிக்கிறேன்


அதன் பின்னால் சமநிலை தன்னால் கூடும்


அந்த சமநிலையானது மிகவும் நேர்த்தியுடனும், அழகுறவும் இருக்கும்


அது இயல்பாக வரும் சமயத்தில் நீங்கள் ஒட்டுதல் இல்லாதவராகிறீர்கள்


துன்பம் வரும் போது அது விலகி விடும் என்பதை அறிகிறீர்கள்


அவ்வாறே மகிழ்ச்சி வரும் போதும் விலகி விடும் என்பதையும் அறிகிறீர்கள் 


எதுவும் நிலைப்பதில்லை


அனைத்தும் கடந்து போகும்


எப்போதும் மாறாது நிலைத்திருப்பது சாட்சிபாவம் மட்டுமே 


அந்த சாட்சிபாவம் சமநிலையக் கொண்டு வரும்


அந்த சாட்சிபாவமே சமநிலை 💝


 *🎊ஓஷோ🎊*


The Book of Understanding 💖

Post a Comment

0 Comments