மூச்சுதான் காலம்

 🏀 மூச்சுதான் காலம் 🏀


          🏀 பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் 

மாறாத ஒன்றாக இயங்குவது மூச்சுக் காற்று மட்டுமே ...


          🏀 எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து 

அது ஓடிக் கொண்டிருக்கிறது..மூச்சுதான் உடம்பிற்கும் உனக்கும் இருக்கும் பாலம் ...


          🏀 இடைவிடாமல் மூச்சு உன்னை உன் உடலோடு இணைத்து வருகிறது..மூச்சுதான் உனக்கும் இந்த பேரண்டத்துக்கும் இடையே ஒரு பாலமாகவும்  இருக்கிறது ...


          🏀 மூச்சு இயங்குவதால்தான் உனக்கு 

காலம் தெரிகிறது..மூச்சு நின்றுவிட்டால் இந்த 

காலவெளியில் உன்னைக் காண முடியாது ...

நீ வேறு ஏதோ தெரியாத பரிமாணத்துக்குச் 

சென்று விடுவாய் ...


          🏀 ஆகவே மூச்சு உனக்கும் காலவெளிக்கும் 

இடையே ஒரு பாலமாக உள்ளது ...உங்கள் மூச்சை தொடர்ந்து விழிப்புணர்வுடன் 

கவனியுங்கள் ...


🏀 ஓஷோ ..

🏀 தந்த்ரா 

தியான உத்திகள் ..

Post a Comment

0 Comments