மௌனத்திற்கும் பேரானந்தத்திற்கும் இடையே உள்ள உறவை

 கேள்வி: பிரிய ஓஷோ !


மௌனத்திற்கும் பேரானந்தத்திற்கும் இடையே உள்ள உறவைப் பற்றி நீங்கள் பேசுவீர்களா?


மௌனம் மட்டுமே போதுமானதா?


மற்ற அனைத்தும் அதைத் தொடர்ந்து வந்துவிடுமா?


ஓஷோ...


🌸 பிரேம் சமர்பண் !


மௌனத்திற்கும், பேரானந்தத்திற்கும் 

எந்த உறவும் இல்லை.


அவை ஒரே விஷயத்தின் இரண்டு பெயர்கள்.


🌸 மௌனமே பேரானந்தம்.


இது அகராதிப் பொருளல்ல.


இது உண்மை நடப்பு அனுபவம்.


அனுபவத்தில் இது,

வேறு வேறு மனிதர்களுக்கு 

இது வேறு வேறாக இருப்பதில்லை.


🌸 நீ மௌனமாக மாறினால்...


உன்னால் கவலைப்பட முடியாது.

உன்னால் இறுக்கமாக முடியாது.

உன்னால் துயரப்பட முடியாது.


நீ சத்தம் போடவும் முடியாது.

உன்னால் தொடர்ந்து படபடக்கவும் முடியாது.


இல்லாவிட்டால்,

எப்படி நீ மௌனத்தில் இருக்க முடியும்?


🌸 இந்த அனைத்து முட்டாள்தனமான வேலைகளும் போய்விட்டால்...


"பேரானந்த நிலையைக் கண்டுணரத் தேவையான இடத்தை...


மௌனம் சுத்தம் செய்து வைக்கிறது."


இவை கிட்டத்தட்ட ஒரே விஷயங்கள்.


ஏனெனில், 

அவை ஒரே சமயத்தில் நடக்கின்றன.


🌸 "நீ மௌனமானால்...


ஒரு குறிப்பிட்ட இனிமை,

ஒரு இனிய மணம்,

ஒரு இனிய எழில்,


இயல்பாகவே உனக்குள் தானாக எழும்."


🌸 ஆனால், உன் மௌனம்

அடக்கப்பட்ட அமைதியாக இருக்கக் கூடாது...


உன் கட்டாயத்தால், 

நீ மௌனமாக இருக்கக் கூடாது...


நீ கட்டாயப்படுத்தி மௌனமானால்...


நீ தியானம் செய்வதற்குப் பதிலாக, 


உன் மனதை அடக்கி அழுத்தி

மௌனமானால்...


நீ உன் மனதுடன் சண்டையிட்டு 

ஜிம்னாஸ்டிக்ஸ் செய்கிறாய்.


🌸 உன் மனதை அமைதியாய் இருக்க கட்டாயப்படுத்துவது சாத்தியமே.


ஆனால், இப்போது பேரானந்தம் கிடைக்காது.


அந்த அமைதி மயான அமைதியாக, 

காலியாக இருக்கும்.


பூஞ்சோலையின் அமைதியாய்,

அது இருக்காது.


அந்த அமைதியில், 

எதுவும் நிரம்பி வழியாது.


வெற்றிடமாக இருக்கும்.


🌸 "தியானத்தின் மூலம் வரும் 

மௌனம் காலி அனுபவமல்ல;


'அது மிகவும் இருப்பது.

நிரம்பி வழியும் அளவு இருப்பது.'


மௌனத்தில் நிரம்பி 

வழியக் கூடியது 

எதுவாக இருக்கமுடியும்?


'பேரானந்தம்தான்.'


🌸 ஆகவே தயவு செய்து 

சரிபார்த்துக் கொள்ளுங்கள்...


உங்கள் மௌனம் 

பேரானந்த நிலையைத் தராவிட்டால்...


நீங்கள் ஒரு தவறான வகை 

அமைதியை அடைய முயற்சிக்கிறீர்கள்.


"பேரானந்த நிலைதான் அளவுகோல் -- நீங்கள் செய்ய முயல்வதை உடனே நிறுத்துங்கள்."


🌸 தியானத்தில் மௌனம் தன்னால் வரும்....


நீங்கள் எந்த தடையுமின்றி,

எந்த அடக்குமுறையின்றி,

மனதை கவனித்துக் கொண்டிருந்தால்...


மௌனம் திடீரென்று, 

ஒரு தென்றல் போல வரும்...


அந்த மௌனத்துடன், 

மலர்களின் நறுமணமும் வரும்...


அதுவே பேரானந்த நிலை.


🌿ஓஷோ🌿

☘நான் ஒரு அழைப்பு☘

Post a Comment

0 Comments